Rasi Palan This Week: மீனம் ராசிக்கு பண வரவு அற்புதம்.. இந்த விஷயங்களில் மட்டும் ரொம்ப கவனம்
Meenam Rasi Palan: ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை, சித்திரை 14 ஆம் தேதி முதல் சித்திரை 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் மேஷத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை, சித்திரை 14 ஆம் தேதி முதல் சித்திரை 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன் (Meenam Rasi Palan)
மீனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பணம் சார்ந்த விஷயங்கள் மற்றும் வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனங்களில் சிறு சிறு பழுதுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கண், பற்கள் சார்ந்த பிரச்சனைகள் வந்து போகும். புதிய விஷயங்களை எடுத்துச் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எதார்த்தமாக செய்யும் விஷயங்களில் கூட கவனம் தேவை.
பணவரவு கொட்டும்
பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள், இளைய சகோதர சகோதரிகள் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. ராஜகிரகமான சூரியன் வலிமையாக இருப்பதால் பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. ஆளுமைத் திறன் அதிகமாக இருக்கும். சண்டை போட்டு ஒரு காரியத்தை முடிப்பீர்கள். புதாதித்ய யோகம் இருப்பதால் வெற்றி பெறும் யோகம் உண்டு. பேராசிரியிர், பல் மருத்துவராவது, நீட் தேர்வில் வெற்றி பெறும் யோகம் உண்டு.
வெற்றி மேல் வெற்றி
திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். 28 ஆம் தேதி முதல் அற்புதமான காலகட்டமாக இருக்கும். அதுவரை வயிறு சார்ந்த பிரச்சனைகள், ஆரோக்கிய குறைபாடுகள், உணவால் பிரச்சனை, கூட பிறந்தவர்கள் அல்லது உறவினர்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த குறைபாடு வருவதற்கான வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம்
காது மூக்கு தொண்டை, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, ஒற்றை தலைவலி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். நவக்கிரகத்தில் இருக்கும் சூரியனுக்கு விளக்கேற்றுவது, கோதுமை சார்ந்த உணவுகளை பசு மாடுகளுக்கு கொடுப்பது நன்மையைத் தரும்.
பொறுப்புகள்
எதிரிகள் விஷயத்தில் கோபமில்லாமல் இருப்பது நன்மை பயக்கும். வார்த்தைகளில் கவனம் தேவை. மற்றபடி பெயர், புகழ், அதிர்ஷ்டம், ஜெயம், பணம் கிடைக்கும் யோகம் உண்டு. புதிய பொறுப்புகள் வந்து சேரும். கெளரவம் ஏற்படும். படைப்பாளிகள், மீடியா துறையினருக்கு அனுகூலமான காலகட்டம். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தூக்கமின்மை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி செல்வது ஏற்றத்தை தரும்.
தொழில்
அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். தொழில் மாற்றம் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். அடுத்தடுத்து முன்னேற்றங்கள், நல்ல செய்திகள் வரக்கூடிய நல்ல வாரமாக இந்த வாரம் உங்களுக்கு அமையும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி ஏற்படும்.
வழிபாடு
சனியும், செவ்வாயும் சேர்ந்திருப்பதால் புரிதல் குறைவாக இருக்கும். டென்ஷன் இருக்கும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டிய நிலை இருக்கும். கவனம் தேவை. மதுரை மீனாட்சியம்மனை வழிபாடு செய்வது நன்மையைத் தரும். சந்தோஷம் ரீதியாக 75 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 90 சதவீதம் நன்றாக இருக்கும்.
-
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: மீன ராசியினரே கவனம்.. சனி தரும் முக்கிய பலன்கள்.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications