Rasi Palan This Week: மீன ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. பண விஷயத்தில் கவனம்
Meenam Rasi Palan: மே 4 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 21 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. அந்த வகையில், மே 5 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 21 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன் (Meenam Rasi Palan)
மீனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்கள் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். கோளார் பதிகம், அனுமன் சாலிஷாவை கேட்பது, படிப்பது ஏற்றத்தைத் தரும். பெரிய வெற்றிகள், சந்தோஷங்கள் ஏற்படும். ஆத்ம ரீதியான நம்பிக்கை ஏற்படும். மரண பயம் நீங்கும். நிறைய தொழில்கள் கிடைக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
முன்னேற்றம்
புதிய கெளரவம் ஏற்படும். எம்எல்ஏ, மந்திரியாகும் யோகம் உண்டு. சுபகாரியங்கள் நிறைய நடக்கும். முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள். வீடு, நிலம், தோட்டம், பண்ணை, வாகனம், வண்டி, விவசாய நிலம், கடற்கரையை ஒட்டிய சொத்துகள் வாங்கக்கூடிய யோகம் உண்டு. எதிர்பார்த்த அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கக்கூடிய காலகட்டம்.
அனுகூலம்
அனுகூலமும், ஏற்றமும் ஏற்படும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளியிடத்தில் இருந்து வரும் நண்பர்களைச் சந்திக்கும் யோகம் உண்டு. பயணங்கள், சுற்றுலாக்கள் சென்று வரும் யோகம் உண்டு. கோயில்கள் திருப்பணிகளுக்குச் செல்வீர்கள். தினந்தோறும் உடற்பயிற்சியை கடைப்பிடிப்பது ஏற்றத்தைத் தரும். வண்டி வாகனங்களில் மாற்றம், பழுதுகளை மேற்கொள்வீர்கள்.
கவனம்
வீட்டில், முகத்தில் கண்ணாடியை மாற்றுவீர்கள். சளி தொந்தரவு, கன்னத்தில் பிரச்சனை ஏற்படும். இளைய சகோதரிக்கு பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்பு. இணையத்தில் பணத்தை இழக்கும் வாய்ப்புள்ளது. மன வலிமை அதிகரிக்கும். மன சங்கடங்கள் பரிபூரணமாக நீங்கும்.
வழிபாடு
நினைத்த காரியங்கள் நடக்கும் அற்புதமான காலகட்டம். பழமுதிர்ச்சோலை, திருச்செந்தூர் முருகர் வழிபாடு அனைத்து விதமான தடைகளையும் தவிடு பொடியாக்கும். உடற்பயிற்சி செய்யாமல் இருக்கும் மீன ராசியினருக்கு முதுகு, முட்டுவலி, பாதம், நகம் தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
-
2026 குருப்பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு குருப்பெயர்ச்சியில் பெரிய மாற்றம்! 2026ல் அதிர்ஷ்டம் வருமா? -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications