Rasi Palan This Week: தடைகளை தவிடு பொடியாக்கும் மீனம் ராசி.. இனி அசுர வளர்ச்சி நிச்சயம்
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மீனம்
மீனம் ராசிக்காரர்கள் யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய அற்புதமான காலகட்டம். உடற்பயிற்சியை தின்தோறும் செய்வது நன்மை பயக்கும். கெட்டவன் கெட்டால் கிட்டிடும் ராஜயோகம். அதே சமயம் கெட்ட கிரகம் என்பதை நியாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். முதுகு, கால், அடிவயிறு, கழிவுப் பாதையில் சிறு பாதிப்புகள் வந்தாலும் மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்வது நல்லது.
தொழில்
படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர் பெரும் பெயர், புகழ் போன்றவற்றைப் பெறும் நல்ல காலகட்டம். தொடர்ச்சியான இடமாற்றங்கள் அனுகூலத்தை ஏற்படுத்தி தரும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையக் கூடிய அமைப்பு ஏற்படும். திருமணத் தடை, புத்திர சந்தானத் தடை போன்றவை நீங்கும். நகைகள் வாங்கும் யோகம் உண்டாகும்.
முதலீடுகள்
முதலீடுகளை செய்யத் தொடங்குவீர்கள். வீடுகளில் இன்டீரியர் வேலைகளைச் செய்வீர்கள், வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். இழுபறியாக இருந்த விஷயங்கள், தடைபட்டுக் கொண்டே இருந்த விஷயங்கள் அனைத்தும் இனி சாதகத்தை ஏற்படுத்தும். அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு இதுவரை இருந்து வந்த மனக் கஷ்டங்கள் படிப்படியாகத் தீரும்.
உடற்பயிற்சி அவசியம்
உடற்பயிற்சி செய்யாத மீனம் ராசியினருக்கு எல்லா விதத்திலும் தடைகளும், சோம்பல்களும், ஜாயிண்ட் வலிகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் அனுகூலம், சந்தோஷம், அடுத்தடுத்து முன்னேற்றம் ஏற்படும். எல்லா விதத்திலும் சந்தோஷங்கள் கொடி கட்டிப் பறக்கும். அம்பாள் வழிபாடு செய்வது, அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்வது விசேஷமான பலன்களை அள்ளிக் கொடுக்கும்.
மகிழ்ச்சி
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். சேமிப்பு, முதலீடுகள் பற்றி சிந்திக்கத் தொடங்குவீர்கள். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்றத்தைப் பெறுவீர்கள். லாபம் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications