Rasi Palan This Week: வீடு, நிலம், டாப் கிளாஸ் யோகம்.. மீன ராசிக்கு அள்ளி கொடுக்கும் அதிர்ஷ்ட தேவதை
வார ராசி பலன்: அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 20 முதல் 26 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்து நிறைவடைந்துள்ளது. அக்டோபர் 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு புத்துணர்ச்சி, நம்பிக்கை கிடைக்கும். எல்லா விஷயத்திலும் ஜெயிக்கும் யோகம் உண்டாகும. பிள்ளைகள் விஷயத்தில் மட்டும் கோபத்தை தவிர்ப்பது நல்லது. கால், தலைவலி, முகத்தில் உள்ள உறுப்புகள் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்யக்கூடிய மீன ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான விஷயங்கள் எதுவும் நடக்காது.
சொத்துகள் குவியும்
முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் ஏற்படாது. நிலம், வீடு, ஆடை ஆபரணங்கள், இடம் வாங்குவது, வீடு கட்டுவது, வைரம் வாங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும். யோக பலத்தை அதிகமாகப் பெறுவீர்கள். பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பிள்ளைகளிடம் இணக்கமாகச் செல்வது நல்லது. அவர்களை தட்டிக் கொடுத்து, அரவணைத்துச் செல்வது நன்மை பயக்கும்.
ஏற்றம்
எல்லா விதத்திலும் ஏற்றங்கள் காணப்படும். தொடர்ச்சியாக இருந்து வந்த மனத் தாங்கல்கள் தீரும். யோக பலன்கள் அதிக அளவில் பெறும் யோகம் உண்டு. நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணங்கள் வந்து சேரும். பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. சரியான இடங்களில் பணங்களை முதலீடு செய்வீர்கள். எடுத்த காரியத்தில் வெற்றி காணும் யோகம் உண்டு.
வழிபாடு
தொட்ட காரியங்கள் துலங்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியர்வை வரும் அளவுக்கு தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும். ஏதாவது கோயில்களில் அன்னதானத்திற்கு அரிசி, பருப்பு, அல்லது கல் உப்பு கொடுப்பது அற்புதத்தை ஏற்படுத்தும். புதன்கிழமையில் பெருமாள், தாயார் வழிபாடு செய்வது ஏற்றத்தை உண்டாக்கும்.












Click it and Unblock the Notifications