Rasi Palan This Week: மீனம் ராசியின் வாழ்க்கை மொத்தமாக மாறப்போகுது.. தொட்டதெல்லாம் இனி ஹிட்டு
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு செல்வாக்குகள் கூடக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் அனுகூலம் காணப்படும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உறவுகளில் அனுகூலம் ஏற்படும். இடமாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம், மனை மாற்றம் என்று அற்புதமான ஏற்றங்கள் ஏற்படும்.
உறவுகள்
நவக்கிரகத்தில் கிருஷ்ணர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். நாராயணியத்தில் 100 ஆவது பாடலை கேட்பது பெரிய அளவுக்கு சந்தோஷமும், அனுகூலமும் ஏற்படும். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. தாய் வழி உறவு, தந்தை வழி உறவு, ரத்த பந்த உறவுகளில் மிகுந்த கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.
முயற்சிகளில் வெற்றி
உறவுகளிடம் மனக் கஷ்டம், பணக் கஷ்டங்களை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வேற்று மொழி மனிதர்களால் அதிகளவிலான ஆதாயம் ஏற்படும். அடுத்தடுத்து எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தைரியம், தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளை திட்டமிட்டு சாதிக்கும் அமைப்பு ஏற்படும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகள் கிடைக்கும்.
அபிவிருத்தி
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எல்லா விஷயங்களிலும் அபிவிருத்தி உண்டாகும். தொழில் அபிவிருத்தி, வியாபார அபிவிருத்தி, உத்தியோக அபிவிருத்தி, படிப்பு அபிவிருத்தி ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்து வந்த பாதிப்புகள், சிக்கல்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் ஏற்றம் ஏற்படும்.
வழிபாடு
மதிப்பு, மரியாதை, செல்வாக்கு கூடும் ஏற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. பொறுமை, நிதானத்துடன் எல்லா விஷயங்களையும் செய்வது நல்லது. மீன ராசியினருக்கு பெருமாள் தாயார் வழிபாடு ஏற்றத்தைத் கொடுக்கும். சுவாமிக்கு நைவேத்திய பொருள்களை வாங்கிக் கொடுப்பது ஆனந்தத்தை ஏற்படுத்தும். வீட்டில் சுபிக்ஷமும், ஆனந்தமும் ஏற்படும்.












Click it and Unblock the Notifications