Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rasi Palan This Week: மீன ராசி பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.. வங்கி விஷயத்தில் கவனம் அவசியம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

meenam-rasi-palan-what-kind-of-benefits-that-meenam-rasi-will-get-from-december-8-to-14

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.

அந்த வகையில், டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் பெற்றோர், பெரியோர், உறவினர்களை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. முதுகு, கழிவுப் பாதை, பாதம் வரை ஏற்படும் சிறு பிரச்சனைகளிலும் மிகுந்த கவனம் செலுத்துவது மேன்மையை உண்டாக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் படிப்படியாக மாறும். பெற்றோர், பெரியோரின் ஆரோக்கியத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.

பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது நன்மை பயக்கும். முதலீடுகளுக்கு குறைவிருக்காது. உத்தியோகம், தொழில், படிப்பு, வியாபாரம் ரீதியாக வேற்று மொழி மனிதர்களால் அதிக ஆதாயம் ஏற்படும்.

தர்மம் தலைகாக்கும்

செவ்வாய்க்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது ஏற்றத்தை ஏற்படுத்தும். சனிக்கிழமை மதிய வேளைகளில் தான தர்மம் கொடுப்பது உங்களுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். கடல் கடந்து பெயர் புகழைப் பெறுவீர்கள். பெற்றோர், பெரியோருக்கும் உங்களுக்கும் இருந்த இடைவெளிகள் நீங்கும். கோளார் பதிகத்தைக் கேட்பது உங்களுக்கு மேன்மையைத் தரும். பூர்வீக சொத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.

யோகமான காலகட்டமாக இருக்கும். செவ்வாய் பார்வை இருப்பதால் அடிபடுவதற்கான வாய்ப்புள்ளது. வேலையில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். ஆனால், மத்திய அரசின் வேலை கிடைக்கும். கோவில் கட்டக்கூடிய பாக்கியம் உண்டாகும். முன்னோர் சொத்து பிரச்சனை நீங்கும். மக்களின் பணங்கள் வந்து சேரும். அண்ணன், தம்பிகளுக்கு இடையேயான பிரச்சனைகள் நீங்கும்.

கவனம்

கோவில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில், வங்கிக் கணக்குகளில் கவனம் தேவை. பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் இணைவதால் கால் முட்டி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். வண்டி, வாகனங்களை மாற்றுவதற்கான யோகம் உண்டாகும். பொறுமை, நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எரிச்சல்கள் ஏற்படும். மருத்துவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

புதிய வேலைகள் செய்யும் போது சில சங்கடங்கள், சர்ச்சைகள் ஏற்பட்டு முன்னேற்றத்தைக் கொடுக்கும். பொறுமையைக் கடைப்பிடித்தால் பெரிய ஏற்றம் உண்டாகும். ஆஞ்சநேயர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதாரமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+