Rasi Palan This Week: மீன ராசிக்கு ஒரு விஷயம் தான் கண்டம்.. மற்றபடி எல்லாமே சக்சஸ்
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மீனம் (Meenam Rasi Palan)
மீனம் ராசிக்காரர்களுக்கு பாக்கிய ஸ்தானம் நன்றாக இருக்கிறது. பாக்கிய ஸ்தானத்தில் புதன் அமர்ந்திருப்பதால் வெங்கடாசலபதி வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும். நல்ல மாற்றங்கள் ஏற்படும். நிறைய வெளியூர், வெளிநாடு செல்வதற்கான யோகம் ஏற்படும். வேலையில் மிக மன அழுத்தத்தை எதிர்கொண்டு இருப்பீர்கள். நிறைய தாக்குதல்கள் வரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.
கோபம் வேண்டாம்
கோபப்படுவது, ஆக்ரோஷப்படுவது, டென்ஷனாவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. எல்லாவற்றிலும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. நிறைய வெற்றி வாய்ப்புகளைத் தேடிக் கொடுக்கும். பயங்கரமான மாற்றம், பெரிய செல்வாக்கை கொடுக்கும். நம்பிக்கை அதிகமாக இருக்கும் வாரமாக இருக்கும். புதிதாக வண்டி வாகனம் வாங்குவது, செல்போன் வாங்குவது, புதிய கோர்ஸ்களை படிப்பது, ஆயங்கள் சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வது போன்ற யோகம் உண்டாகும்.
ஆரோக்கியம்
கால் பாதம், கால் முட்டி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. தொழில், உத்தியோகத்தில் அபிவிருத்தி உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். இடமாற்றம் உண்டாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள் வெற்றியைக் கொடுக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும்.
ஏற்றம்
உறவுகள் விஷயங்களில் பெரும் ஏற்றம் உண்டாகும். கோளார் பதிகத்தை தினந்தோறும் கேட்பது ஏற்றத்தை ஏற்படுத்தும். ஜென்மசனி இருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். வயிறு கழிவுகள் தொடர்பான பிரச்சனை, கால் வலி, கை வலி ஏற்படும் என்பதால் கவனம் தேவை. தெம்பாக இருப்பது நன்மை பயக்கும்.
வெற்றி
எடுத்த காரியங்களில் வெற்றியைக் குவிக்கும் யோகம் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு ஏற்படும். பங்குனி மாதத்தில் மட்டும் சிறிது கவனமாக இருப்பது நல்லது. வழுக்கலான இடங்களில் கவனம் தேவை. வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். சமுதாயத்தில் பெரிய மனிதர்களை சந்திக்கக் கூடிய பிராப்தம் உண்டாகும்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications