மீன ராசிக்கு இனி நல்ல நேரம் ஆரம்பம்.. ஜென்ம சனி நடப்பதால் இதில் மட்டும் ரொம்ப கவனம்
ஆவணி மாத பலன்கள்: அம்மனுக்குரிய விசேஷ மாதமான ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கப் போகிறது. இந்த ஆவணி மாதத்தில் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஆவணி மாத கிரக நிலை
எல்லா விதமான சுப காரியங்களை செய்யவும் மக்கள் காத்துக் கொண்டிருக்கும் மாதமாகும். ஆவணி மாதம் என்பது சூரிய மாதம். சூரியனுடைய வீடான சிம்மத்திற்கே சூரியன் வரக்கூடிய மாதம் தான் ஆவணி. கார்காலம், சிம்ம மாதம் என்று ஆவணி மாதம் அழைக்கப்படும். ஏற்கனவே சிம்மத்தில் கேது இருக்கிறார். 7 ஆம் இடத்தில் ராகு, 8 இல் சனி, 11 இல் குரு அமர்ந்திருக்கின்றனர். இந்த ஆவணி மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு புதிய நம்பிக்கையும், தைரியமும் பிறக்கும். ஆவணி மாதத்தில் எல்லா விதத்திலும் ஏற்றமும், நம்பிக்கையும் உண்டாகும். தொடர்ச்சியாக இருந்த மனத் தாங்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடைபெறும். வாராஹி மந்திரத்தை கேட்பது, வாராஹியை வழிபடுவது செய்து வருவது, உக்கிர வழிபாடு செய்வது எல்லா விதத்திலும் ஏற்றம் பெறும்.
முன்னேற்றம்
தொழிலில், வியாபாரத்தில், உத்தியோகத்தில், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். தாய் வழி உறவுகள், தந்தை வழி உறவுகள், அவர்களுடைய தேக ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது ஏற்றத்தைய ஏற்படுத்தும். முதுகு, கழுத்துப் பகுதியில் சிறு பிரச்சனைகள் வந்தாலும் மீன ராசிக்காரர்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.
உடற்பயிற்சி நல்லது
தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது. அப்படி செய்யாதவர்கள் படிக்கட்டில் ஏறி இறங்கும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சியை செய்யாதவர்களுக்கு மனம் சார்ந்த பிரச்சனைகளும், சங்கடங்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, அந்த விஷயங்களில் அதீத கவனமாக இருப்பது நல்லது. வேலை சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த அழுத்தங்கள் அனைத்தும் தீரும்.
வார்த்தையில் கவனம்
வீட்டில் உள்ளவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளும் சூழல் ஏற்படும். வெளியிடத்தில் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்து கொள்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் பேசும் வார்த்தையில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. யாரிடம் பேசினாலும் எதிர்த்துப் பேசாமல் அனுசரணையாக செல்வது நல்லது. எதிர்ப்புகள், எதிரிகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆனால் எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு போவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
பெரிய பாதிப்பு இல்லை
50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எந்தவிதமான பிரச்சனைகளும், பாதிப்புகளும் வராது என்பால் கவலை கொள்ளத் தேவையில்லை. நடுத்தர வயது தாண்டியவர்களுக்கு தொழில், வேலை நன்றாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் மிகப்பெரிய அளவில் இருக்கும். உங்களுக்குத் தேவையான மற்றும் வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அனுகூலம்
நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கம் காலகட்டமாக இருக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்குத் தேவையான விஷயங்களையும், குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தேவையான விஷயங்களையும் செய்து மகிழ்வீர்கள். உற்சாமான மாதமாகவும், ஏற்றம் மிகுந்த மாதமாகவும் இந்த மாதம் உங்களுக்கு அமையும்.












Click it and Unblock the Notifications