Meenam: தடைகளைத் தகர்த்தெறியும் மீன ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்தப் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சியின் நடைபெற்று நிலையில் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். பங்குனி மாதம் பிறந்துள்ள நிலையில் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.

சூரியன் பெயர்ச்சியுடன் பிறக்கும் பங்குனி மாதம் சில ராசியினருக்கு அற்புதமான மாற்றத்தைக் கொடுக்கும். பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம், ஸ்ரீராம நவமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், அனுமன், பெருமாள், ராமருக்கு விசேஷம் நிறைந்த மாதம். இந்த பங்குனி மாதத்தில் மீனம் ராசிக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன் (Meenam rasi palan)
மீனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு 6 ஆம் அதிபதியான சூரியன் இந்த மாதம் முழுவதும் ராசியிலேயே வந்து அமர்கிறார். தடைகளை தகர்த்து வெற்றிகளை நீங்கள் அடையக்கூடிய காலகட்டமாக இருக்கும். இளைய பருவத்தினருக்கு பல்வேறு தடைகள் ஏற்படும். எந்த விஷயத்தை எடுத்தாலும் பிரச்சனை என்பது போன்ற அமைப்பு ஏற்படும்.
முன்னேற்றம்
30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். ஆரம்பத்தில் தடைகள் இருந்தாலும் முடிவில் பல்வேறு வெற்றிகளைக் குவிக்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். எல்லாவிதமான நன்மைகளும் கிடையும். 40 வயதை தாண்டியவர்களுக்கு தொழிலில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் வளர்ச்சி ஏற்படும். எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். நல்ல லாபங்கள் கிடைக்கும்.
நம்பிக்கை
எதிரிகள் கூட நண்பர்களாகும் நல்ல மாதமாக இருக்கும். பயணங்கள் அதிகமாக இருக்கும். வடக்கு அல்லது வடமேற்கு திசையை நோக்கிச் செல்லக்கூடிய அமைப்புகள் உள்ளன. ஏற்றுமதி, இறக்குமதி துறையில் இருப்பவர்களுக்கு ஏற்கனவே இருக்கக்கூடிய சுணக்கமான நிலைமைகள் மாறி இனிமேல் தொழில் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையைப் பெறுவீர்கள்.
கடன் கிடைக்கும்
நிறைய செலவுகள் ஏற்பட்டாலும் கடன் கிடைக்கும், இன்டீரியர் டெக்கரேஷன் செய்வீர்கள். கட்டடம் கட்டுவீர்கள், தொழிலில் முதலீடு செய்வீர்கள். எதிர்பார்க்காத நிறைய விஷயங்கள் நடக்கும். உத்தியோகத்தில் அபரிமிதமான முன்னேற்றங்கள் ஏற்படும். உடற்பயிற்சியை மட்டும் மறக்கக் கூடாது. கணவனாக இருந்தால் மனைவியின் விஷயத்திலும், மனைவியாக இருந்தால் கணவரின் விஷயத்திலும் இணக்கமாகச் செல்வது நன்மையை ஏற்படுத்தித் தரும்.
பண வரவு
விவசாயிகளுக்கு இந்த ஆண்டுகள் கைகொடுக்கும். அதற்கான ஆதார அமைப்புகள் இந்த மாதத்திலேயே புலப்படும். இதுவரை இருந்து வந்த எதிர்மறையான அமைப்புகள் எல்லாம் விலகும். 40, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: மகரம், கும்பம், மீனம் ராசிக்கு அடிக்குமா ஜாக்பாட்?.. குருவின் அருள் கிடைக்குமா? -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications