Meenam: மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்தை அள்ளிக் கொடுக்க போகும் கிரகங்கள்
மே மாத பலன்கள் 2026: மீன ராசியினருக்கு மே மாதத்தில் என்ன விதமான நல்ல பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மே மாதத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் முக்கியமான பெயர்ச்சிகளை சந்திக்கின்றன. மாதத்தின் ஆரம்பத்தில் ரிஷப ராசியில் செவ்வாய், புதன், சூரியன் ஆகியவை ஒன்றாக கூடும் நிலை உருவாகிறது. அதனைத் தொடர்ந்து மாதத்தின் பிற்பகுதியில் ரிஷபத்தில் புதன் மற்றும் சூரியன் இணையும் சேர்க்கையும் நடைபெறுகிறது.

இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை. அந்த வகையில், மீன ராசியினரின் தொழில், வருமானம், குடும்பம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
மீன ராசி பலன்
மீன ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு இந்த மே மாதம் சாதகமான மாதமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பணவரவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவைப்படலாம். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள்.
ஆரோக்கியம்
கை, தோல்பட்டை, நரம்புகள், விரல்கள், தலை, ஒற்றை தலைவலி தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. இளைய சகோதரன், சகோதரிகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சுற்றுலா செல்லக்கூடிய யோகம் உண்டாகும். காசு, பணத்திற்குப் பிரச்சனை இருக்காது, வீடு முழுக்க சந்தோஷங்கள் இருக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
பேச்சில் கவனம்
ஆடம்பரமான விஷயங்கள் எல்லாம் அடுத்தடுத்து நடக்கும். பேச்சில் கவனம் தேவை. சொத்தைப் பல் தொடர்பான சிகிச்சை மேற்கொள்வீர்கள். வண்டி, வாகனங்களை புதிதாக வாங்கும் யோகம் உண்டு. கணவனாக இருந்தால் மனைவி, மனைவியாக இருந்தால் கணவருக்கு சிறிய சர்ஜரி செய்வீர்கள் என்பதால் கவனம் தேவை. கோபம், காரத்தை குறைப்பது நல்லது.
பெரிய பணவரவு
வீடு, குடும்பம், சொத்துகளை விற்று பெரிய பணம் வந்து சேரும். நல்ல பார்ட்டிகள் கிடைப்பார்கள். முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். அற்புதமாந காலகட்டமாக இருக்கும். எந்தவிஷயமாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை முயற்சி செய்வது நன்மையைத் தரும். மாமனார், தம்பியின் உடல்நிலையில் கவனம் தேவை. அவர்களுக்குப் பணம் கொடுத்து ஏமாறுவதைத் தவிர்ப்பது நல்லது.
சுபகாரியங்கள்
வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்கான பாராட்டு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு அல்லது பதவி உயர்வு தொடர்பான நல்ல தகவல்கள் வரலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. செலவுகள் இருந்தாலும் பணவரவு சமநிலையுடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் சுபகாரிய பேச்சுகள் நடைபெறலாம்.
திருமணம்
காதல் உறவில் இருந்த குழப்பங்கள் சரியாகும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். துணையுடன் புரிதல் அதிகரிக்கும். உடல்நிலையில் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் தூக்கமின்மை மற்றும் மனஅழுத்தம் காரணமாக சோர்வு ஏற்படலாம். உணவு பழக்கத்தில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோருக்கு சாதகமான காலம் இது.
வழிபாடு
ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மன வலிமை அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். முழு தெய்வ அனுக்கிரகங்கள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் உக்கிர நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைத் தரும். சந்தோஷம் 90 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications