மீனம் ராசிக்கு அமோக வளர்ச்சி.. புதிய வாய்ப்புகள், வெற்றி.. தொட்டதெல்லாம் துலங்கும் யோகம்
Weekly Rasi Palan: ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன்
மீனம் ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. புதிய தொழில் தொடங்கும் யோகம் ஏற்படும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும்.
கடன் தீரும்
கடன் அடையும் யோகம் உண்டாகும். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். தெய்வ காரியங்களுக்குச் சென்று வருவீர்கள். பெரிய ஆற்றலுக்குரிய அமைப்பு உள்ளது. நீண்ட காலமாக செய்ய வேண்டும் என்று நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வீடு கட்டுவது, பிளாட் கட்டுவது போன்ற அமைப்பு உள்ளது. வயிறு எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.
பணவரவு
நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும். தொழில், உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைத்து முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத பணவரவு கிடைப்பதுடன், பொருளாதார நிலையும் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தைரியமாக தொடங்கினால் வெற்றி கிடைக்கும்.
முன்னேற்றம்
மற்றவர்களால் நிறைய நல்ல விஷயங்கள் ஏற்படும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையில் புதிய அடியை எடுத்து வைப்பீர்கள். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் மேன்மை ஏற்படும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயமும், சந்தோஷமும் ஏற்படும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும்.
வழிபாடு
தான தர்மங்கள் செய்வது மேன்மையைத் தரும். மாசாணியம்மன் வழிபாடு ஏற்றத்தைத் தரும். ஸ்ரீ ராகவேந்திரர் வழிபாடு, மகான்கள் வழிபாடு பாதுகாப்பைத் தரும். வயிற்றில் உள்ள உறுப்புகள் விஷயத்தில் கவனம் தேவை. கர்ப்பிணிகள் மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றுவது நல்லது. த்தியோகம், தொழில், வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும்.


Click it and Unblock the Notifications
