Meenam Rasi Palan: மீனம் ராசிக்கு அடிக்கும் மெகா ஜாக்பாட்.. ஒரு விஷயத்தில் மட்டும் ரொம்ப கவனம்
Meenam Rasi Palan: சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில், மீனம் ராசியினருக்கு இந்த மாதம் புதிய வாய்ப்புகளும் சில முக்கிய மாற்றங்களும் காத்திருக்கின்றன. தொழில், பணவரவு, உறவுகள் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்களை இங்கே பார்க்கலாம்.
சித்திரை மாதம் 2026 மற்றும் பராபவ தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது. சூரிய பகவான் மீன ராசியிலிருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சியாகியுள்ளார். இந்த சித்திரை மாதத்தில் அட்சய திருதியை நன்னாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கல் உப்பு, அரிசி, பருப்பு வாங்குவது நன்மையைத் தரும். மே 4 முதல் 28 ஆம் தேதி வரை கடும் வெயில் நிலவும்.

பராபவ வருடத்தின் முதல் மாதமான இந்த சித்திரை மாதத்தில் ஒவ்வொரு ராசியினருக்கும் நற்பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த சித்திரை மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
மீனம் (Meenam Rasi Palan)
மீனம் ராசியினர் ஜென்ம சனியில் இருப்பதால் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வயிறு சார்ந்த பிரச்சனைகள், அஜீரண கோளாறை பார்த்துக் கொள்வது நல்லது. முதுகு வலி, மறைமுக ஸ்தானம், முகத்தில் உள்ள உறுப்புகளில் கவனம் தேவை. சட்டம் சார்ந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பானவர்களின் தொடர்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பேச்சில் கவனம்
எதிரிகள் பலம் அதிகமாக இருப்பதால் வாக்குவாதங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வார்த்தையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யாரிடம் பேசினாலும் மிகுந்த இணக்கமாகப் பேசுவது நன்மை பயக்கும். எதிரிகள் திடீரென உங்களுக்கு எதிராக அணியில் சேர்வதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.
அபிவிருத்தி
எல்லா விஷயங்களும் புதிதாக தெரியக்கூடிய காலகட்டமாக இருக்கும். அரசுத் துறை, அரசியல்வாதிகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சித்திரை மாதம் முடியும் வரை உங்கள் ஆர்வத்தை, கோபத்தை காட்டிக் கொள்ளாமல் இருப்பது நன்மை. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் அபிவிருத்தி ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும்.
முன்னேற்றம்
பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடல்நலம் மேம்பாடு அடையும். நல்ல பெயர் கிடைக்கும். செல்வாக்கு கூடும் பகைவர்களால் இருந்து வந்த பாதிப்புகள், பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திடீர் பணவரவு ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்
பொறுமை
அரசு காரியங்களில் பொறுமை அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள் கூட உங்களைப் பற்றி தெரிந்து கொண்டு நண்பர்களாக மாறுவார்கள். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.
பணவரவு
எதிர்பாராத பணவரவு ஏற்படும். தந்தையுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் அவருடம் பேசும்போது மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். இழுபறியாக இருந்த கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். ஜென்ம சனி நடந்து கொண்டிருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
வழிபாடு
வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது. வார்த்தைகளால் பிரச்சனைகள் வரும் என்பதால் பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பது நல்லது. எதிரிகளின் வீரியம் பலமாக இருப்பதால் நரசிம்மர் கவசம், காயத்ரி கவசம், துர்க்கை கவசம் படிப்பது கேட்பது உங்களை அனைத்து பாதிப்புகளில் இருந்தும் பாதுகாக்கும். மீன ராசியினருக்கு எல்லா விதத்திலும் நன்மைகள் ஏற்பட குருவாயூர் கிருஷ்ணர் வழிபாடு, விநாயகர் வழிபாடு ஏற்றத்தைத் தரும்.
-
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
2026 குருப்பெயர்ச்சி: குரு பகவானின் அருளால் மீன ராசிக்கு வாழ்க்கை மாறப் போகிறது! -
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
Mithunam Rasi Palan: கொடிகட்டி பறக்கப்போகும் மிதுன ராசி.. தொட்டது துலங்கும் யோகம் -
Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு இந்த வாரம் காத்திருக்கும் மாற்றம்.. எந்ததெந்த விஷயங்களில் கவனம்? -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு ஜூன் 7க்குள் வரப்போகும் குட்நியூஸ்.. அதிர்ஷ்டம் காத்திருக்குது












Click it and Unblock the Notifications