Meenam: மீன ராசிக்கு நகைகளை குவிக்கும் யோகம்.. இதை மட்டும் மிஸ் செய்திடாம பண்ணுங்க
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். கார்த்திகையில் நிறைய விசேஷங்கள் நடக்கும். ஐயப்ப பக்தர்கள் லட்சக்கணக்கானோர் மாலை போடும் காலம். கார்த்திகை தீபம் வரும் மாதம். நவம்பர் 17 முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரையிலான கார்த்திகை மாதம்.

கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை தீபம் மிகவும் பிரதானமானதாகும். வீட்டில் ஒற்றைப் படையில் தீபமேற்றுவது நன்மை பயக்கும். கார்த்திகை மாதம் முழுவதும் சோமவாரம் எனும் திங்கள்கிழமை விசேஷமான காலமாகும். சிவன் கோயிலில் நடைபெறக்கூடிய சங்காபிஷேகத்தில் கலந்துகொள்வது, அபிஷேகத்தில் கலந்துகொள்வது நன்மையை ஏற்படுத்தும்.
பரிகாரம்
கடன் குறைய வேண்டும், தேக ஆரோக்கியத்தில் பலம் பெற வேண்டும் என்றால் கோயிலுக்கு பழங்கள் வாங்கிக் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும். கடன் குறைய வேண்டும் என்றால் திங்கள்கிழமை தோறும் பச்சரிசி வாங்கிக் கொடுப்பது நன்மை பயக்கும். பஞ்சாங்கத்தின்படி, கார்த்திகை மாதத்தில் கன மழை பெய்யும். தமிழகம் முழுவதும் வெள்ளக் காடாக மிதக்கும் சூழ்நிலை ஏற்படும். இந்த கார்த்திகை மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு ஜென்மசனி இருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். குலதெய்வ வழிபாடுகளைத் தவறாமல் செய்ய வேண்டும். மூதாதையரை கார்த்திகை மாதம் நினைவில் வைப்பது நல்லது. குலதெய்வத்தை வழிபடுவது, குலெதெய்வ கோயில்களுக்கு அன்னதானம் போடுவது, கல் உப்பு, மிளகு, சீரகம் வாங்கிக் கொடுப்பது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
சூப்பர் மாற்றம்
மீன ராசியினர் 40 நிமிடம் உடற்பயிற்சி செய்வது, தியானம் செய்வது மேன்மையைத் தரும். இடமாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம் போன்ற நல்ல மாற்றங்கள் ஏற்படும். சுபகாரியத் தடைகள் நீங்கும். அதிகளவில் முதலீடு செய்யக்கூடிய மாதமாக இருக்கும். ஆடை, ஆபரணங்கள், நகைகள் வாங்குவது, டைமண்ட் வாங்குவது, வண்டி வாகனங்களை மாற்றக்கூடிய அற்புதமான காலகட்டம்.
வழிபாடு
தொலைதூரத்தில் இருந்தாலும் பெற்றோர், பெரியோருடன் மனம் விட்டுப் பேசுவது, ரத்தபந்த உறவுகளிடத்தில் பேசி உங்களுக்கும் அவர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை நிவர்த்தி செய்வது நல்லது. விநாயகர், முருகர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். பல், கழுத்து, தலை, காது, மூக்கு, தொண்டை, முகத்தில் உள்ள உறுப்புகளை மிகுந்த கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.
கவனம்
வாகனத்தில் செல்லும்போது விதிமுறைகளைக் கடைப்பிடித்துச் செல்வது நல்லது. ஹெல்மெட், சீட் பெல்ட் போன்றவற்றை முறையாகப் பயன்படுத்துவது நன்மை பயக்கும். செல்போன் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்கினால் கண்டிப்பாக சிக்கல்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
பரிகாரம்
செவ்வாய்க்கிழமையில் பசு மாடுகளுக்கு உணவளிப்பது நன்மை பயக்கும். அகத்திக்கீரையைத் தவிர ஏதாவது ஒரு காய்கறிகள், பழங்களைக் கொடுப்பது பெற்றோர், பெரியோரின் தேக ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்யும். குடும்ப வழி உறவுகள், சொத்துகள் பிரச்சனை தீருவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications