Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குறிவைத்து அடிக்கும் மீனம் ராசி.. 100% ஜாக்பாட்.. ஒரு விஷயத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் மீனம் ராசியினருக்கு (Meenam Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

meenam-rasi-palan-what-kind-of-benefits-will-get-meenam-rasi-people-during-this-maasi-month

சிவனுக்கு வழிபாடு செய்வது, ஆராதனை செய்வது, இரவு நேரம் கண் விழித்து சிவனுக்கு செய்யக்கூடிய தொண்டு திருப்தியைக் கொடுக்கும். உங்களுடைய கர்மாக்கள் நிவர்த்தியாகும். இந்த மாசி மாதத்தில் மீனம் ராசியினருக்கான முழு பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு விரய ஸ்தானத்தில் ஏராளமான கிரகங்கள் உள்ளன. வீடு மாற்றம், இடமாற்றம், நில மாற்றம், வேலை மாற்றம், படிப்பு மாற்றம், தொழில் மாற்றம், வேறு நாடு, வேறு ஊர்களுக்குச் செல்வது, தெரியாத இடங்களுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். மன மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பாராத பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

ஆலய தரிசனம்

சிலருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். பெரியவர்களிடம் இருந்து தனித்துச்செல்வது, பிரிந்து செல்வது போன்ற நிலைமை ஏற்படும். அதனால், தேவையில்லாத மன வேதனை, பிரச்சனைகள் ஏற்படும் சூழல் உள்ளது. நிறைய ஆலய வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள். திவ்ய தேசங்களுக்குச் சென்று வருவீர்கள்.

கடன் தீரும்

பாடல் பெற்ற ஸ்தலங்களுக்குச் செல்லும் யோகம் உண்டாகும். கால் பாதம், முட்டிகளில் இருக்கக்கூடிய வலிகள் தீரும் யோகம் உண்டு. சுவாமி தரிசனம் சென்று செய்து வருவதால் மன நிம்மதி பெறுவீர்கள். கிரெடிட் கார்டு கடன்களை அடைக்கும் யோகம் உண்டு. கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு கடனை அடைப்பீர்கள். முதலீடுகளுக்குத் திட்டமிடுவீர்கள்.

முதலீடு

தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். நினைத்த விஷயங்கள் கைகூடும் யோகம் உண்டு. திட்டமிட்டுச் செய்யும் காரியங்களில் சொல்லி அடிக்கும் யோகம் உள்ளது. மன சந்தோஷம் உண்டாகும். பெரிய வெற்றிகள் பெறும் காலகட்டம். தெரியாத பல பிரச்சனைகள் நீங்கும். நினைத்த காரியங்கள் ஜெயிக்கும் யோகம் உண்டு. பலவிதமான நன்மைகளைப் பெறுவீர்கள். முன்னேற்றப் பாதையில் செல்வதற்கான யோகம் உண்டு.

சந்தோஷம்

தேவையில்லாத பிரச்சனை, மனக் குழப்பம், மன அமைதியின்மையில் இருந்து விடுதலை பெறக்கூடிய அமைப்பு உள்ளது. ஊர் மாறுவதால் சந்தோஷம் பெறும் யோகம் உண்டு. நிறைய பேருக்கு கடன்கள் அடையும். பெரிய வெற்றிகளைப் பெறக்கூடிய காலகட்டம். உங்களுடைய முக்கியமான நண்பரின் இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

வழிபாடு

சந்தோஷம் ரீதியாக 70 சதவீதமும். பொருளாதாரம் ரீதியாக 95 சதவீதமும் நன்மை பெறுவீர்கள். சுவாரசியம் நிறைந்த மாதமாக இந்த மாசி மாதம் உங்களுக்கு அமையும். அனந்த சயனன், பத்மநாபன் வழிபாடு நல்ல அனுகூலத்தை ஏற்படுத்தும். ஒட்டுமொத்தமாக மாசி மாதத்தில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். நல்ல ஏற்றம் நிறைந்த மாதமாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+