Meenam: மீனம் ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. எந்த விஷயங்களில் எல்லாம் கவனம் தேவை?
மே மாத ராசி பலன்: 2026 மே மாதம் பிறக்கவுள்ளது. இந்த மே மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். கிரக நிலைகள் ஒவ்வொரு ராசிக்கும் வேறுபட்ட பலன்களை தரும் நிலையில், மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எப்படி அமையும்? எந்த கிரகங்கள் சாதகமாக உள்ளன, எவற்றில் கவனம் தேவை? இதோ மே மாத மீனம் ராசிக்கான கிரக பலன்கள்.

மீனம்
மீனம் ராசியினருக்கு ஜென்மசனி நடந்து கொண்டிருக்கிறது. நடுத்தர வயதை தாண்டியவர்களுக்கு பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. இளைய பருவத்தினருக்கு குறிப்பாக ரேவதி நட்சத்திரத்தினருக்கு சிறிய சிறிய மாற்றங்கள் ஏற்படும். உத்திரட்டாதி, பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கும் மன அழுத்தத்தில் இருந்து விலகும் சூழல் ஏற்படும்.
புதிய அறிமுகம்
எந்தப் பிரச்சனை வந்தாலும் அதிலிருந்து வெளியில் வந்துவிடலாம் என்கிற தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். பணம் வரக்கூடிய மாதமாக இருக்கும். ராஜயோகாதிபதியான 2, 9க்கு உரிய செவ்வாய் உங்களுக்கு வலிமையான அமைப்பில் நன்றாக இருக்கிறார். பெரிய கஷ்டங்கள் எதுவும் இருக்காது. வியாபாரிகள், தொழில் முனைவோருக்கு லாபம் சம்பாதிக்கக்கூடிய மாதமாக இருக்கும்.
செவ்வாய் 45 நாட்களுக்கு அந்த இடத்தில் இருப்பது பெரிய நன்மைகளைத் தரக்கூடியதாக இருக்கும். நன்கு பணம் சம்பாதிக்கக்கூடிய மாதமாக இருக்கும். 3 ஆம் இடத்தில் சுக்கிரன் வலுத்திருப்பதால் நல்ல அறிமுகங்கள் கிடைக்கும். சமுதாயத்தில் பெரிய நிலையில் இருப்பவர்கள், பணக்காரர்கள், அந்தஸ்தில் பெரியவராக இருப்பவர்கள் மூலமாக நல்ல உதவிகள், ஆதாயம் உண்டாகும். அவர்கள் மூலமாக வாழ்க்கை நன்றாக மாறும் யோகம் உண்டு.
லாபம் கொட்டும்
கிழக்கு திசையில் இருந்து நல்ல லாபங்கள் வரும். சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்ல விரும்புவோருக்கு விசா போன்ற அனுமதிகள் வரும் வாய்ப்புள்ளது. 20, 30 வயதில் இருப்பவர்களுக்கு நல்லவைகள் நடக்க தாமதமாகும் வாய்ப்புள்ளது. ஜென்மசனியில் இருப்பதால் சிறு சிறு பாதிப்புகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும். நிறைய மன வருத்தங்கள் இருக்கும்.
சிலருக்கு விரயங்கள், செலவுகள், மன கஷ்டங்கள் இருக்கும். எவ்வளவு தான் வேலை செய்தாலும் அங்கீகாரம் கிடைக்காத தன்மை இருக்கும். அந்த நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். பகல் நேரத்தில் தூங்கிவிட்டு, ராத்திரியில் வேலை செய்யும் அமைப்பு உள்ளது. அப்பா, அம்மாவுக்கு பொருளாதார பின்னடைவுகள் இருக்கும்.
இளைஞர்கள்
ஜென்மசனியின் ஆதிக்கத்தில் இருப்பதால் மற்றவர்களை நம்பாமல் உங்களை நீங்கள் நம்புவது நம்பிக்கையைத் தரும். இளைய பருவத்தினருக்கு இந்த பாதிப்புகள் இருக்கும். நடுத்தர வயதினருக்கு இவை பொருந்தாது. மாறாக உங்களுக்கு சொத்துகள் சேரும். வருமானம் உயரும். சகோதரர்களால் நன்மைகள், மேன்மைகள் உண்டாகும். சகோதர, சகோதரிகளுக்கு மேன்மைகள் ஏற்படும். இளைய பருவத்தினருக்கு வேலை, காதல், பணம் விஷயங்களில் மன அழுத்தம் இருக்கும். ரேவதி நட்சத்திரத்தினர் அகலகால் வைக்காமல் பெரியவர்கள் சொல்படி நடப்பது ஏற்றத்தைத் தரும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications