Rasi Palan This Week: மீனம் ராசிக்கு 10 மடங்காக உயரும் லாபம்.. கால் வைக்கும் இடமெல்லாம் அதிர்ஷ்டம்
Meenam Rasi Palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த வாரம் ஜனவரி 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த வாரம் முக்கியமான வாரம். வாழ்வில் முன்னேற்றம் பெற தை அமாவாசை தினமான இன்று முன்னோர்களை வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும். பசு மாடுகளை தானமாக அளிக்கலாம். 19 ஆம் தேதி புண்ணிய நதிகளில் நீராடுவதால் கர்மாவுக்கான கடன்கள் நிவர்த்தியாகும். 25 ஆம் தேதி ரதசப்தமி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் சூரிய பகவானை வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
இந்த வாரம் மிக முக்கிய கிரகப் பெயர்ச்சியான புதன் பெயர்ச்சி நடைபெறுகிறது. தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு புதன் பெயர்ச்சியாகிறார். அந்த வகையில் இந்த தை மாதத்தில் ஜனவரி 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன் (Meenam Rasi Palan)
மீனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். சொந்த பந்தங்கள் மீண்டும் ஒன்று சேருவீர்கள். விட்டுப் போன நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் ஒன்ற சேரக்கூடிய காலகட்டமாக இருக்கும். உங்களை விட்டுப் போன விஷயங்கள் எல்லாம் இனி உங்களுக்கு சாதகமாக இருக்கும். லாபங்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். இது உங்களுக்கான நேரமாக இருக்கும்.
லாபம் 10 மடங்கு உயரும்
லாப ஸ்தானத்தில் கிரகங்கள் அணிவகுத்து நிற்பதால் பெரிய லாபம் கிடைக்கும். ப்ரோமோஷன் கிடைக்கும். தொழிலில் பெரிய முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்க்காத முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் 10 மடங்கு உயர்வு ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களுக்கு ஆர்டர் குவியும். உங்களுடைய உழைப்புக்கான ஊதியம், அங்கீகாரம் கிடைக்கும். வாய்ப்புகளைத் தவறவிடாமல் இருப்பது நன்மை பயக்கும்.
ஆதாயம்
ஏழரைச் சனி ஜென்மத்தில் உள்ளதால் உறவுகள் தொடர்பான விஷயங்கள், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேற்று மதத்தினரால் அதிகம் ஆதாயம் ஏற்படும். உடற்பயிற்சி செய்து வருவது எல்லா விதத்திலும் ஆதாயத்தை ஏற்படுத்தும். இழுபறியாக இருந்த விஷயங்கள் மாறும். தொடர்ச்சியாக இருக்கும் சந்தோஷங்கள் அனுகூலத்தை ஏற்படுத்தும். ராகவேந்திரர் மந்திரத்தைச் சொல்வது தடைகளைத் தவிடு பொடியாக்கும்
அனுகூலம்
வியாபாரம் செய்பவர்களுக்கு சுபவிரய பாக்கியம் உண்டாகும். கணவன், மனைவியிடம் கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. சம்பந்தமில்லாத விஷயங்களை எல்லாம் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. எந்த பயணங்கள் வந்தாலும் அதனை எடுத்துக் கொள்வது பெரிய சந்தோஷத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். தொடர்ச்சியாக இருந்து வந்த மனத் தாங்கல்கள் தீரும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். துணை, பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும்.
வழிபாடு
எல்லா விஷயங்களும் உங்களுக்கு பாசிட்டிவாக நடக்கும். மார்பகம், நெஞ்சகம், இதயப் பகுதி, கழுத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. மற்றபடி எந்தவித பாதிப்பும் ஏற்படாது. திட்டமிட்டு காரியங்களை செய்து முடிப்பீர்கள். பல்வேறு வகையில் வருமானங்களைப் பெறுவீர்கள். சந்தோஷமும், பொருளாதாரமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும். இஷ்ட தெய்வமான முருகப் பெருமானை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Mithunam Rasi Palan: கொடிகட்டி பறக்கப்போகும் மிதுன ராசி.. தொட்டது துலங்கும் யோகம் -
Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு இந்த வாரம் காத்திருக்கும் மாற்றம்.. எந்ததெந்த விஷயங்களில் கவனம்? -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications