Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Meenam: மீனம் ராசிக்கு டபுள் ஜாக்பாட்.. பொற்காலம் ஆரம்பம்.. மிஸ் பண்ணிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

Meenam Rasi Palan: பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

meenam-rasi-palan-what-kind-of-benefits-will-get-meenam-rasi-people-from-feb-9-to-15

கிரக நிலைகள்

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் நிறைவடைந்து பிப்ரவரி 13 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. சூரியன் கும்பத்திற்கு பிரவேஷம் ஆகிறார். சூரியன், புதன், சுக்கிரன், ராகு, திரிகோணத்தில் குரு வக்கிரமாக அமர்கிறார். இந்த 4 கிரகங்கள் சேருவது நல்லது இல்லை. அதுவும், புதனும் ராகுவும், சுக்கிரனும் ராகுவும், சூரியனும் ராகுவும் சேருவது மோசமான நிலையாகும். இப்போது 4 கிரகங்களும் சேருவது பொதுவாக நன்மையைத் தராது. சனியின் வீட்டில் 4 கிரகங்கள் இருந்தாலும் குருவின் பார்வை பலத்தால் இருப்பதால் சிறு சிறு பிரச்சனைகள் நீங்கும்.

இந்த வார ராசி பலன்

சிங்கப்பூர், சிவகங்கை, தேவக்கோட்டை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கோயில்களில் தீ விபத்து, அசம்பாவிதங்கள், சிலிண்டர் வெடிப்பது, அரசியல் கட்டடங்களில் தாக்குதல், விமான விபத்து போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கலை உலகம் சார்ந்த நபரின் உயிரிழப்பு ஏற்படும். இந்த வாரத்தில் மகரம், ரிஷபம், கன்னி ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

மீனம் ராசி பலன் (Meenam Rasi Palan)

மீனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அமோகமான காலகட்டமாக இருக்கும். லாப ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் பெரிய பொறுப்புகள் தேடி வரும். பணம், பொருளாதாரத்தில் அற்புதமான ஏற்றம் உண்டாகும். மத நம்பிக்கை அதிகரிக்கும்.

மனவியாதி நிவர்த்தியாகும். நம்பிக்கை பல விதத்தில் பல நண்பர்கள் மூலமாக ஏற்படும். எல்லோரிடமும் மறைமுகமான எண்ணங்கள் இருந்தாலும் பாசிட்டிவான விஷயங்களை எடுத்துக் கொண்டு செயல்படக்கூடிய அற்புதமான காலகட்டம்.

ஏற்றங்கள்

அபாரமான நேரமாக இந்த காலகட்டம் இருக்கும். புதன், சூரியன், சுக்கிரன், ராகு இணைவு இருப்பதால் வண்டி, வாகனங்களுக்கு செலவு செய்வீர்கள். பெரிய வாய்ப்புகள் நல்ல மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். எடுக்கும் முடிவுகளில், விஷயங்களில் வெற்றி உண்டாகும். நிறைய ஏற்றங்கள் ஏற்படும். தேவையில்லாத கடன்களை அடைத்து முடிப்பீர்கள். வட்டிக்கு பணம் வாங்காமல் இருப்பது நல்லது.

கடன் தீரும்

தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம். எடுக்க கூடிய முடிவுகளுக்கு பலராலும் பாராட்டப்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். பார்வதி தேவி வழிபாடு செய்வது நல்லது. வயிறு, முதுகுத் தண்டுவடம் சார்ந்த பாதிப்புகளில் கவனம் தேவை. எதிரிகள் விஷயத்தில் வெற்றி பெறுவீர்கள். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள்.

வழிபாடு

வீடு, நிலம் சார்ந்த விஷயங்களில் நல்ல நன்மைகள் கிடைக்கும். கடனை அடைப்பதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். சந்தோஷம், பொருளாதாரம் ஏற்றம் 85 சதவீதம் நன்றாக இருக்கும். மீனாட்சி அம்மன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+