Meenam Rasi Palan: மீன ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் செவ்வாய் பகவான்.. லாபம் கொட்டப் போகுது
Meenam Rasi Palan: பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 5 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் (Meenam Rasi Palan).
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மாசி மாதம் பிறந்துள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன் (Meenam Rasi Palan)
மீனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அமோகமான காலகட்டமாக இருக்கும். லாப ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் வேண்டாமென்று சொன்னாலும் பெரிய பொறுப்புகள் தேடி வரும். பெரிய அளவுக்கு பணம், பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். மத நம்பிக்கை அதிகரிக்கும். மனோவியாதி நிவர்த்தியாகும். நம்பிக்கை பல நண்பர்கள் மூலமாக ஏற்படும்.
மதிப்பு, மரியாதை
அபாரமான காலகட்டமாக இருக்கும். புதன், சூரியன், சுக்கிரன், ராகு இணைவு இருக்கும்போது வண்டி, வாகனங்களில் செலவுகள் ஏற்படும். அதனை கண்டுகொள்ளத் தேவையில்லை. பெரிய வாய்ப்புகள், நல்ல மதிப்பு, மரியாதை அதிகரிக்கும் காலகட்டம். நீங்கள் எடுக்கும் முடிவுகளும், செய்கிற விஷயங்களும் உங்களுக்கு நன்றாக அமையும். தேவையில்லாத கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தெய்வ அனுக்கிரகம் பரிபூரணமாக உள்ளது.
கவனம்
யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். உயரமான இடங்கள் விலையுயர்ந்த பொருள்களை கையாளும் மீன ராசியினர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உத்தரவாதத்துடன் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் பெரியளவு சந்தோஷம் ஏற்படும்.
அனுகூலம்
வண்டி, வாகனத்தில் அனுகூலம் காணப்படும். சுப விரய பிராப்தம் உண்டாகும். வரவுக்கு மீறிய செலவுகள் இருந்தாலும் அவை சந்தோஷம் தரும் செலவாக இருக்கும். மரண பயம் நீங்கும். யோகத்தை அதிகளவில் பெறக்கூடிய அமைப்பு உள்ளது. ஒருநாள், இரண்டு நாள் மருத்துவமனையில் இருந்து தேக ஆரோக்கியத்தை புது தெம்புடன் பெறுவதற்கு மாசி மாதம் உதவிகரமாக இருக்கும்.
ஆரோக்கியம்
ஆயுர்வேத சிகிச்சை, புத்துணர்ச்சி சிகிச்சை எல்லாம் இந்த மாதத்தில் எடுப்பீர்கள். பண வரவுக்குண்டான அமைப்பு உள்ளது. இருப்பினும், நிறைய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் நிறைய நல்ல காரியங்கள் நடக்கும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்களின் சந்திப்பு ஏற்படும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும் அற்புதமான காலகட்டம்.
வழிபாடு
வட்டிக்கு மட்டும் பணம் வாங்காமல் இருப்பது நல்லது. மீனாட்சியம்மன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் மற்றும் பொருளாதார ஏற்றம் 85 சதவீதம் நன்றாக இருக்கும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது. சுப விரய பிராப்தம் உண்டாகும். சனிக்கிழமைகளில் பசு மாடுகளுக்கு உணவளிப்பது, சனிக்கிழமை தோறும் மதிய வேளைகளில் உணவு, ஊறுகாய் தானமாக கொடுப்பதும் நன்மையைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications