Rasi Palan This Week: பிளான் பண்ணி ஜெயிக்கும் மீனம் ராசி.. அடுத்தடுத்து குட் நியூஸ்
Magaram Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். அந்த வகையில், மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன் (Meenam Rasi Palan)
மீனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு விரயங்கள் அதிகமாக இருக்கும் என்பதால் விலை உயர்ந்த பொருள்களில் மிகுந்த கவனம் தேவை. துணை விஷயத்தில் கோபங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் இனி அடுத்தடுத்து நடக்கும் காலகட்டம். உடற்பயிற்சியை தினந்தோறும் கடைப்பிடிப்பது நல்லது.
முதலீடுகள்
வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெரிய அளவுக்கு அனுகூலம் ஏற்படும். முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள்.
கடன் தீரும்
உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏழரை சனியே வந்தாலும் ஏற்றமும், நம்பிக்கையையும் ஏற்படும். உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. உணவு விஷமாகும் தன்மை உள்ளதால் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
ஏற்றுமதி
இந்த காலகட்டத்தில் நீங்கள் திட்டமிடும் விஷயங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். ஆலயங்களுக்குச் செல்வது, தான தர்மங்கள் செய்யும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைக்கும். புதிய கண்ணாடி, வாட்ச், கூலிங் கிளாஸ் போடும் யோகம் உண்டாகும். காதல் திருமண யோகம் உண்டு.
திட்டமிட்டு ஜெயிக்கும் யோகம்
வீட்டில் நல்ல காரியங்கள் நடந்தால் அதற்கான செலவுகள் அதிகளவில் ஏற்படும். சுபச் செலவுகள் நிறைய நடக்கும். பணவரவும் அற்புதமாக இருக்கும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். எந்த விஷயத்தை ஆரம்பித்தாலும் அதில் கண்டிப்பாக ஜெயிப்பீர்கள். திட்டமிட்டு ஜெயிக்கும் யோகம் உண்டாகும். நண்பர்கள் மூலமாகப் பிரச்சைகள் வரும். தேவையில்லாமல் பகையை வளர்ப்பதை தவிர்ப்பது நல்லது. மறைமுகமான பிரச்சனைகள் வந்து போகும். நிறைய விஷயங்கள் பாசிட்டிவாக நடக்கும்.
வழிபாடு
சனிக்கிழமை மதிய வேளைகளில் 1 மணி முதல் 2 மணி வரை உணவு தானம் செய்வது, எலுமிச்சை சாதம், எலுமிச்சை ஜூஸ் தானமாக கொடுப்பது நல்லது. அடிவயிறு, உணவு செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. பைரவர் வழிபாடு சகல விதத்தில் நன்மைகளை ஏற்படும். தெருநாய்களுக்கு உணவளிப்பது நன்மைகளை ஏற்படுத்தும், மன சங்கடங்களை நீக்கும். சந்தோஷமும் பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications