Rasi Palan This Week: மீனம் ராசிக்கு எதிர்பார்க்காத அதிர்ஷ்டம்.. ஒரு விஷயத்தில் கவனம்
Meenam Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். [Meenam rasi palan]

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன் (Meenam Rasi Palan)
மீனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய காலகட்டம். செல்வாக்குகள் கூடும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும். எடுத்த காரியத்தில் ஜெயம், அனுகூலம் காணப்படும். சட்டத்திற்குப் புறம்பானவர்களின் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யோசித்து கையெழுத்து போடுவது நன்மை தரும்.
வாக்குவாதம்
உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மேலதிகாரிகள் விஷயத்தில் இணக்கமாகச் செல்வது நல்லது. அரசுத் துறை, அரசியல்வாதிகள் கவனமாக இருக்க வேண்டும். கணக்கு வழக்குகள், ஆவணங்களை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வெளிநாடு யோகம்
தனிப்பட்ட முறையில் செல்வாக்கு ஏற்படும். அமோகமான காலகட்டமாக இருக்கும். விரய ஸ்தானத்துக்கு குரு பார்வை உள்ளது. ஆரோக்கியப் பிரச்சனை, மன ரீதியாக பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். வெளியூரில் இருந்து பணம் வரும். வெளிநாட்டில் செட்டிலாகக் கூடிய யோகம் உண்டாகும். எதிர்பாராத விஷயங்கள் நடக்கும்.
சுக்கிரன் அருள்
புதிய வேலைக்கு மாறுவீர்கள். நிறைய கணக்குகள் மாறும் காலகட்டம். 10 ஆம் இடத்தில் இருக்கும் சந்திரன் மேல் குரு பார்வை விழுவதால் அலுவலகத்தில் கொடுக்கும் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் பெரிய புகழ், பாராட்டுகள் கிடைக்கும். ராசி லக்னத்தில் சுக்கிரன் இருப்பதால் சந்தோஷத்துக்கு குறைவிருக்காது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
வெற்றி
நிறைய பிரச்சனைகள் தீரும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. புதிதாக தொடங்கும் விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். மீன ராசியினருக்கு பங்குனி மாதத்தில் சூரியன் வழிபாடு மிகவும் முக்கியமாகும். கண், பதட்டம், கோபம் சார்ந்த விஷயத்தில் கவனம் தேவை. இந்த வாரத்தில் நிறைய ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள்.
வழிபாடு
பெண்களுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியதிருக்கும். ரத்த அழுத்தம், விட்டமின் குறைபாடுகளில் கவனம் தேவை. சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதார ரீதியாக 85 சதவீதமும் ஏற்றம் உண்டாகும். பத்மாவதி தாயார் வழிபாடு அனுகூலத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications