மீனம் ராசியினரே ரெடியா?.. ஆவணியில் எதிர்பாராத அதிர்ஷ்டம்.. பணவரவு முதல் தொழில் வரை

Subscribe to Oneindia Tamil

ஆவணி மாத பலன்கள்: சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய இந்த ஆவணி மாதத்தில் மீனம் ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்கள், நல்ல பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

சூரியன் சிம்ம வீட்டிற்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். இந்த ஆவணி மாதத்தில் செவ்வாய் புதனுடைய வீட்டில் உபஜய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். குரு பகவான் உச்சமாகி கடக வீட்டில் அமர்ந்திருக்கிறார். புதன் சிம்ம வீட்டிற்கு வருகிறார். சூரியன் புதன், கேது இமைவு ஏற்படுகிறது. 6 ஆம் இடத்தில் சுக்கிர பகவான் வலுவிழந்து இருக்கிறார்.

meenam-rasi-palan-what-kind-of-benefits-will-get-meenam-rasi-people-in-this-tamil-month

சனி வக்கிரமாகி மீன ராசியில் இருக்கிறார். சந்திரன் தன்னுடைய பயணத்தை மீன வீட்டில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த ஆவணி மாதத்தில் மீன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

மீன ராசி பலன்

மீன ராசியினருக்கு 8 ஆம் இடத்தில் சுக்கிர பகவான் மாதத்தின் பாதியில் வருகிறார். இது எதிர்பாராத அதிர்ஷ்டத்தைக் குறிக்கும். 5 ஆம் இடத்தில் குரு பகவான் உச்சமாக இருந்து ராசியைப் பார்த்து மிகப்பெரிய பாக்கியம் ஆகும். 4 இல் செவ்வாய், 5 இல் குரு, 6 இல் சூரியன், 7 இல் புதன், 8 இல் சுக்கிரன் என்கிற நிலைமை இருக்கிறது. போன மாதம் வரையும் சுக்கிரன் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்போது உச்ச புதன் பார்க்கிறார். எந்த விஷயத்துக்கும் கவலைப்படாமல் எல்லா விஷயத்தையும் சமாளிக்கக் கூடிய மாதமாக இந்த மாதம் இருக்கும்.

யோகம்

ரேவதி நட்சத்திரக்காரர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பீர்கள். குடும்பத் தலைவருக்கு பொருளாதாரப் பிரச்சனை, குடும்பத் தலைவிகளுக்கு ஆரோக்கியப் பிரச்சனை அல்லது கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை போன்ற நிலைமைகள் இருக்கும். இருப்பினும், இந்த ஆவணி மாதத்தில் உங்களுக்கு யோகம் பெறக்கூடிய அமைப்பு உள்ளது. 9 ஆம் அதிபதி 10 ஐயும், 10 ஆம் அதிபதி 9 ஆம் இடத்தையும் பார்ப்பதால் வருமானத்திற்குப் பஞ்சம் இருக்காது.

பண வரவு

பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடனைப் பற்றிய கவலைகள் இருக்கும். புதிய கடன்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஒருபுறம் சொத்துகள சேர்ந்தாலும் ஒரு புறம் கடன் ஏறிக்கொண்டே இருக்கம். முயற்சிகள் தாமதமாகி பழிக்கும் அமைப்பு. வேலைக்காரர்களை நம்பி பொறுப்பை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. பணம் சார்ந்த விஷயங்களை வேலை ஆட்களிடம் ஒப்படைப்பதை தவிர்க்க வேண்டும்.

தொழில்

தொழில் தொடங்கியிருப்போர் நீங்களே இறங்கி செல்வது நல்லது. ஏதவாது மனக் கஷ்டம் இருந்தாலும் அதை சமாளிப்பீர்கள். 8 ஆம் இடத்தில் சுக்கிரன் வலுவாக இருக்கிறார். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். பெண்களால் கஷ்டப்பட்டவர்களுக்கு அவர்களின் மூலமே லாபம் கிடைக்கும். அம்மா உறவு, அக்கா தங்கை உறவு, மனைவி குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் நல்ல அனுகூலமும், பெரிய மாற்றங்களும் இருக்கும்.

செலவு ஏற்படும்

பண வரவு நன்றாக இருக்கும். ஆண்களுக்கு பெண்களாலும், பெண்களுக்கு ஆண்களாலும் செலவுகள் ஏற்படும். உறவைத் தக்கவைத்துக் கொள்ள, அன்பைக் காட்டுவதற்காக எதிர் பாலினத்தவருக்கு இன்பச் செலவுகள் செய்வீர்கள். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. இந்த ஆவணி மாதம் உங்களுக்கு அற்புதமான பலன்களை அள்ளிக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+