Meenam Rasi palan: மீன ராசியினரே ரெடி ஆகுங்க.. வாழ்க்கையில் பெரிய மாற்றம் வருகிறது!
Vaikasi Matha Palangal: வைகாசி மாதத்தில் மீன ராசியினருக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா, என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.

சுக்கிரன் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடகத்தில் வந்து அமருகிறார். கேது சிம்ம வீட்டிலும், ராகு கும்ப வீட்டிலும் இருக்கிறார். இந்த கிரக நிலைகள் மீன ராசியினருக்கு என்ன விதமான பலன்களைக் கொடுக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மீனம் (Meenam Rasi palan)
மீன ராசியினருக்கு இந்த வைகாசி மாதம் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கக்கூடிய காலமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளில் தெளிவும் உறுதியும் காணப்படும். நீண்ட நாட்களாக மனதில் இருந்த சில திட்டங்களை இந்த மாதத்தில் செயல்படுத்த தொடங்குவீர்கள். பயணங்கள் மூலம் நல்ல அனுபவங்களும் முன்னேற்ற வாய்ப்புகளும் கிடைக்கும்.
ஆரோக்கியம்
பிள்ளைகளின் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் அடுத்த ஓராண்டுக்கு கவனமாக இருக்க வேண்டும். அவர்களிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வயிறு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும்.
லாபம்
நல்ல காரியங்கள் எல்லாம் நடக்கும். லாபம் ஏற்படும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். குடும்பத்தில் காணப்பட்டிருந்த வறுமைகள் நீங்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக செல்வாக்கு உயரும்.
முன்னேற்றம்
குறிப்பாக ஆன்மீகம் சார்ந்த பயணங்களில் ஈடுபட விருப்பம் அதிகரிக்கும். கோவில் தரிசனம், புனித யாத்திரை போன்றவற்றை திட்டமிடக்கூடிய சூழல் உருவாகும். வேலை, தொழில் மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் தரக்கூடிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திறமையை பிறர் பாராட்டுவார்கள்.
வழிபாடு
மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு இந்த மாதத்தில் உங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். புதிய அறிமுகங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவியாக அமையும். பொருளாதாரத்திலும் நிலையான முன்னேற்றம் காணப்படும். நவக்கிரகத்தில் இருக்கும் ராகு கேது, வாராஹி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
ஜூன் 2026 அதிர்ஷ்ட ராசிகள்: குரு, சுக்கிரன், செவ்வாய் அருளால் முன்னேற்றம் காணும் 5 ராசிகள்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications