Meenam: மீன ராசிக்கு காத்திருக்கும் பிரகாசமான மாற்றம்.. திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகுது
Meenam Rasi Palan: மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீன ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த வாரம் சித்திரை முடிந்து வைகாசி மாதம் பிறக்கிறது. அந்த வகையில், மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீன ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மீன ராசி பலன் (Meenam Rasi Palan)
மீன ராசியினருக்கு இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் உண்டாகும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் பிரச்சனை பரிபூரண நிவர்த்தியாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும். உத்தியோக ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தாய் வழி உறவு, தந்தை உறவு அனுகூலத்தை ஏற்படுத்தும்.
திடீர் அதிர்ஷ்டம்
திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். தொடர்ச்சியாக இருந்து வந்த மனக் கஷ்டங்கள், பண கஷ்டங்கள் நீங்கும். ரத்த பந்த உறவுகளில் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது.
அனுகூலம்
அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறும். தொடர்ச்சியாக இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். தொழில் ரீதியாக அனுகூலங்கள் காணப்படும். உடற்பயிற்சியை தவறாமல் செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
பணவரவு
மீன ராசியினருக்கு இந்த வாரம் பல நல்ல மாற்றங்களை தரக்கூடியதாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சில வேலைகள் இப்போது சாதகமாக முடிவடையும். தொழில் மற்றும் பணவரவு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கலாம். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வர வாய்ப்பு உள்ளது. தொழில் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் லாபகரமான சந்திப்புகளை பெறலாம். பணவரவு சீராக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும் சூழல் உருவாகும்.
யோகம்
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையிலான கருத்து வேறுபாடுகள் குறையும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. கல்வியில் மாணவர்கள் கவனம் செலுத்தினால் நல்ல முன்னேற்றம் காணலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
-
ஆனி மாதத்தில் மிதுன ராசிக்கு ராஜயோகம்.. தொழில், பணவரவில் அதிரடி முன்னேற்றம்! -
ஆனி மாத பலன்: ராஜயோகத்தைப் பெறும் மேஷம் ராசி.. இந்த மாதத்தை தவற விட்டுடாதீங்க -
மகரம், கும்பம், மீனம் ராசிக்கு ஜாக்பாட் அடிக்குமா?.. ஜூன் மாதம் வரும் அற்புத மாற்றம் -
ஆனி மாத பலன்: அடித்தாடும் ரிஷப ராசி.. குரு, சனியில் அருளால் பண மூட்டையை அள்ளும் யோகம் -
ஜூன் 2026 அதிர்ஷ்ட ராசிகள்: குரு, சுக்கிரன், செவ்வாய் அருளால் முன்னேற்றம் காணும் 5 ராசிகள்! -
June Rasi Palan 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் எப்படி? -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications