Rasi Palan This Week: மீன ராசி பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு.. இனி எல்லாமே ஏறுமுகம் தான்
Meenam Rasi Palan: மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.
அந்த வகையில், மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன் (Meenam Rasi Palan)
மீன ராசியினருக்கு யோக பலன்கள் அதிகளவில் பெறும் காலகட்டம். எதிரிகள் விலகிச் செல்வார்கள். வழக்குகளில் வெற்றி ஏற்படும். புதிய பொறுப்புகள் வரும். தனிப்பட்ட முறையில் உங்கள் செல்வாக்கு கூடும். எதிர்பாராத, ஆச்சரியமான விஷயங்கள் எல்லாம் நடைபெறும். தொழில் ரீதியாக அற்புதங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
சிக்கல் தீரும்
வாகன அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும். புதிய பொறுப்புகளுக்கு வருவீர்கள். அரசு, அரசியல் துறையில் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். தொடர்ச்சியாக இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இழுபறியாக இருந்து வந்த சிக்கல் தீரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் பலரால் பாராட்டக்கூடிய அமைப்பை ஏற்படுத்தும்.
தடைகள் அகழும்
இதுவரை இருந்து வந்த தடைகள் அனைததும் தவிடு பொடியாகும் வாரம். இந்த காலகட்டத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், படிப்பு மாற்றம் ஏற்படும். கழுத்து, கை பகுதியில் வலி வருவதற்கான வாய்ப்புள்ளது. வண்டி, வாகனங்களில் சிறிய சிறிய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இளைய சகோதர, சகோதரிக்கு கண், எலும்பு சார்ந்த பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது.
பணவரவு
சகோதரர்களுக்கு பணம் கொடுத்தால் திரும்பி வராது. செவ்வாய் ஆட்சி பலம் பெற்றிருப்பதால் பண வரவு அற்புதமாக இருக்கும். பேசினால் காரியம் நடக்கும். போனில் பேசுவதை விட நேரில் பார்த்தால் எல்லா விஷயங்களும் நடக்கும். கல், மணல், கட்டுமானம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்ம். வீட்டில் நிறைய சுபகாரியங்கள் நடக்கும்.
ஆரோக்கியம்
பெரிய விஷயங்கள் எல்லாம் தள்ளிப்போய் நடப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். சலிப்பு அதிகமாக வரும் மாதமாக இருக்கும். தேவையில்லாத பகை, தேவையில்லா அழுத்தம், வயிறு உபாதை வாரத்தின் இறுதியில் வர வாய்ப்புள்ளதால் கவனம். பணம் காசிற்குப் பிரச்சனை இருக்காது எப்போதும் ஆரோக்கியத்தில் மட்டும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரம் 90 சதவீதமும், சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும் நன்மைகள் நடக்கும்.
முதுகு, கழுத்து வலி தொடர்பான பாதிப்புகளைப் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு முன்னேற்றத்தைத் தரும், கோளார் பதிகத்தை சொல்லி வருவது அற்புதத்தை ஏற்படுத்தும்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications