Meenam Rasi Palan: மீன ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. பண விஷயத்தில் ரொம்ப கவனம்
செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகத்தில் இருக்கும் 9 கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு கிரகங்களின் முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு கடுமையான எதிர்மறையான காலகட்டமாக இருக்கும். போன மாதம் வரை 7 ஆம் இடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த செவ்வாய் 15 ஆம் தேதிக்குப் பிறகு 8 ஆம் இடத்துக்கு வருகிறார். 8 ஆம் இடத்தில் செவ்வாய் வந்தால் பணப் பற்றாக்குறை வருவதற்கான வாய்ப்புள்ளது. பணத்தில் வீண் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
பண விஷயத்தில் கவனம்
மற்றவர்களை நம்பி பணத்தை இழக்கும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இளைய பருவத்தினர் பண விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கணவர், மனைவி உறவு, காதலன், காதலி உறவில் எல்லாம் கடும் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. 6 ஆம் அதிபதி 7 ஆம் இடத்துக்கு வருவதால் புதிய ஆண், பெண்களின் அறிமுகம் வருவதற்கான வாய்ப்புள்ளது.
ஜென்மசனி
அடுத்த ஆண்டு ரேவதி நட்சத்திரக்கார்களுக்கு கடும் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காலகட்டமாக இருக்கும். ஜென்மசனியில் யார் நண்பராக வருகிறார், யார் காதலன், காதலி அமைப்பில் வருகிறார்கள் என்பது போன்ற விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அட்டகாசமான காலகட்டமாக இருக்கும். பொங்குசனி இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் பெறுவீர்கள்.
முன்னேற்றம்
வியாபாரம், தொழில், படிப்பு, உத்தியோகம் ரீதியிலான முன்னேற்றங்களைப் பெறுவீர்கள். இதுவரை தடைபட்டு வந்த அனைத்து விஷயங்களும் இனி படிப்படியாக நடக்கத் தொடங்கும். சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் அவற்றைத் தடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். 6 ஆம் அதிபதி 7 ஆம் வீட்டில் அமர்வதால் ஏதாவது ஒரு வகையில் மன அழுத்தங்கள், மன வருத்தங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நமது துணையால் சிறு மன சங்கடங்கள் வரும்.
புத்திசாலித்தனம்
மாதத்தின் பிற்பகுதியில் இருந்து பெரிய அளவில் நம்பக் கூடிய உறவுகளால் உங்களுக்கு சோதனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மீன ராசியினர் பொதுவாக நல்லவர்கள். புத்திசாலித்தனமானவர்கள் என்பதால் எதையும் சமாளிப்பீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் அகல கால் வைக்காமல் இருப்பது நல்லது. புத்தி சாதுரியமாக அனைத்து விஷயங்களையும் சமாளிக்கும் தன்மை ஏற்படும்.
எதிர்பார்க்காத செலவு
7 ஆம் இடத்தில் புதன் உச்சமாகி ராசியைப் பார்க்கிறார். 8 ஆம் இடத்தில் செவ்வாய் அமர்ந்தாலும் குருவின் பார்வையில் அமர்வதால் எதிர்பார்க்காத செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உடன் பிறப்புகள், உறவினர்களுக்கு செலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வீண் செலவுகள், வெட்டிச் செலவுகள், பயணங்களால் செலவுகள் போன்றவை ஏற்படும். ஆனாலும், எதையும் சமாளிக்கக்கூடிய தன்மை உண்டாகும். 40, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பெரிய சோதனைகள் இருக்காது. நல்ல செலவுகள் மட்டுமே இருக்கும்.












Click it and Unblock the Notifications