மீனம் ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. தொழில், வேலையில் வரப்போகும் குட் நியூஸ்.. ஒரு விஷயத்தில் கவனம்
வார ராசி பலன்: ஆகஸ்ட் 11 முதல் 17 ஆம் தேதி வரையிலான ஆடி 26 முதல் ஆவணி 1 வரையிலான இந்த வாரத்திற்கான மீன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு
அந்த வகையில், ஆகஸ்ட் 11 முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மீனம்
மீன ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு சுப விரையங்கள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். நல்ல விஷயங்களுக்காக போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு படிப்படியாக நடக்கும். சிறிய சிறிய விஷயங்களை கூட செய்ய மறந்திருப்பீர்கள். இனி அந்த விஷயங்கள் எல்லாம் மாறும். குழந்தைகளால் ஏற்படக்கூடிய மனக் கவலை, மன சஞ்சலங்கள் போன்றவை சரியாகும்.
புரிதல்
சனிவக்கிரமாக இருக்கும்போது சொல்கிற விஷயம் புரியாது. எல்லா விஷயத்திலும் தடை ஏற்படும். நம் நல்லதுக்கு சொல்கிறார்களா, இல்லையா என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்குத் தெரியாத விஷயங்களை செய்யாமல் இருப்பது நல்லது. யாருக்கு தெரியுமோ அவர்களிடம் கொடுப்பது நல்லது. உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எந்தவொரு பாதிப்புகளும் ஏற்படாது.
தைரியம், தன்னம்பிக்கை
தைரியம் அதிகரிக்கும். இந்த ஆவணி மாதத்தில் எல்லா விதத்திலும் ஏற்றம் பெறுவீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். அனுகூலம் ஏற்படும். தொடர்ச்சியாக இருந்து வந்த மனத் தாங்கல்கள் நீங்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறும். வாராஹி மந்திரத்தை கேட்பது, வாராஹியை வழிபட்டு வருவது, உக்கிர தெய்வத்தை வழிபாடு செய்து வருவது எல்லா விதத்திலும் முன்னேற்றம் ஏற்படும்.
முன்னேற்றம்
வியாபாரம், தொழில், உத்தியோகம், படிப்பு தொடர்பான விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவுகளில் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. முதுகு, கழுத்து பகுதிகளில் சிறு கோளாறுகள் இருந்தாலும் மீன ராசியினர் மிகுந்த கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. உடற்பயிற்சி தினந்தோறும் கண்டிப்பாக செய்வது நல்லது.
பண வரவு
ஆரோக்கியத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இனி அற்புதமான காலகட்டமாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் ஏற்றம் பெறுவீர்கள். சந்தோஷம், பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள் 90 சதவீதம் நன்றாக இருக்கும் காலகட்டமாக இருக்கும்












Click it and Unblock the Notifications