Rasi Palan: மேஷ ராசியினருக்கு பிப்ரவரி முதல் 15 நாட்கள் எப்படி இருக்கும்.. முழு பலன்கள் விவரம்
மேஷம் ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்துள்ளது. நாளை பிப்ரவரி மாதம் பிறக்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களும் நன்றாக இருக்கும். படிப்படியாக தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது. உங்களுக்காக முதலில் நீங்கள் வாழக் கற்றுக் கொள்வது நன்மை பயக்கும். மற்றவை எல்லாம் தேடி வரும்.
கிரக நிலை
நீங்கள் உங்களுக்காக யோசிக்கும் போது மட்டும்தான் குடும்பம், தொழில், நண்பர்கள் என எல்லோரும் உங்களைத் தேடி வருவார்கள். கிரக நிலைகள் அற்புதமான அமைப்பில் உள்ளதால் நல்ல ஏற்றம் ஏற்படும். உடற்பயிற்சியைக் கைவிடாமல் கடைப்பிடிப்பது நன்மை பயக்கும். மனசோர்வு, மனக் கலக்கம், ஏதோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வுகள் இருக்கும்.
ஏற்றம்
அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். தொழிலில் ஏற்றம் ஏற்படும். முதலீடுகள் நன்றாக இருக்கும். எந்தவொரு விஷயத்துக்கும் பயப்படாமல் இருப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் ஏற்படும். இந்த விஷயத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். புதிய பொறுப்புகளுக்கு வருவீர்கள்.
வழிபாடு
இழுபறியாக இருந்த விஷயங்களை எல்லாம் செய்து முடிக்கும் யோகம் உண்டு. மனமகிழ்ச்சியுடன் இருக்கக்கூடிய காலகட்டம். அதனால், தேவையில்லாதவற்றை சிந்திக்காமல் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பது நன்மை பயக்கும். மேஷ ராசியினருக்கு முருகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications