சொந்த வீடு, கார் ஜாக்பாட் அடிக்கும் 5 ராசிகள்.. புதன் சனியின் தசாங்க யோகத்தால் கொட்டும் அதிர்ஷ்டம்
Dashanka Yoga Palan: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் முக்கியமான கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளன. புதனும், சனியும் இணைந்துள்ளதால் தசாங்க யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் சொந்த வீடு, கார், மனை என செல்வத்தை அனுபவிக்கப் போகும் 5 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கிரகங்களின் இளவரசனான புதனும், கர்மக்காரகனான சனி பகவானும் பிப்ரவரி 4 ஆம் தேதி நேற்று காலை 10:18 மணி முதல் இணைந்து தசாங்க யோகத்தை உருவாக்கியுள்ளன. ஜோதிட சாஸ்திரத்தின்படி புதன் மற்றும் சனியின் தசாங்க யோகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த யோகத்தால் எழுத்து துறை, ஆராய்ச்சி, கல்வித் துறையில் உள்ளவர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.

தொழில், வியாபாரம், வணிகம், முதலீடு, நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல முடிவுகள் எடுக்கும் திறனையும், தெளிவையும் இந்த யோகம் கிடைக்கச் செய்யும். பண வரவு அதிகரிக்கும். சவால்கள், பிரச்சனைகளைக் கடந்து வந்து வெற்றி பெறுவார்கள். இந்த தசாங்க யோகத்தால் மங்களகரமான சுப பலன்களையும், செல்வ செழிப்பையும் அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து பார்க்கலாம்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவானே அதிபதியாக உள்ளார். இதனால் புதனின் சேர்க்கை நல்ல பலன்களைத் தரும். தசாங்க யோகத்தால் உங்களுடைய தொழில் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் அனுபவிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, உயர் பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. பண வரவு அதிகரிக்கும். வருமானம் உயரும். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றமான காலமாக இருக்கும். உங்களுடைய வருமானம் இரட்டிப்பாகும். வீடு, கார், நிலம் போன்ற சொத்துகள் வாங்குவதற்கான யோகம் தரும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.
மிதுனம்: மிதுன ராசிக்கு புதன் அதிபதியாக உள்ளார். சனி புதனின் சேர்க்கையால் உருவாகும் தசாங்க யோகம் உங்களுக்கு சுப பலன்களைத் தரும். உங்களுடைய வருமானம் திடீரென அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் புதிய பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வளர்ச்சியான காலகட்டமாக இருக்கும். உங்களுடைய வருமானம் பெருகும். நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொந்த வீடு, கார், முதலீடுகளில் கவன் செலுத்தி அதில் வெற்றி அடைவீர்கள். குடும்பத்துடன் இனிமையான நேரத்தை செலவிடுவீர்கள்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு அதிபதியான இருப்பவர் சனி பகவான். இதில் புதனின் சேர்க்கை என்பது அதிர்ஷ்ட பலன்களை அள்ளித் தரும். கும்ப ராசிக்காரர்களின் வருமானம் உயரும். நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றமான காலமாக இருக்கும். புதனின் சஞ்சாரத்தால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கூட்டாளிகளுடன் இணைந்து புதிய லாபகரமான ஒப்பந்தங்களைப் போடுவீர்கள். நிதி சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. திருமண வாழ்க்கை இனிமையானதாக இருக்கும்.
கன்னி: புதன் சனியின் சேர்க்கையால் உருவாகும் தசங்க யோகத்தால் கன்னி ராசிகாரர்களுக்கு மங்களகரமான பலன்களை அளிக்கும். உங்களுடைய தொழில் வாழ்க்கையில் நிதி சார்ந்த ஆதாயங்களைப் பெறுவீர்கள். நிதி விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானம் இரட்டிப்பாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களைப் போடுவீர்கள். முதலீடு செய்வதற்கான நல்ல வாய்ப்பு உண்டாகும். உரிய ஆலோசனைகளைப் பெற்று முதலீடு செய்வது நல்லது.
துலாம்: தசாங்க யோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு யோக பலன்களை அள்ளித் தரும். தொழில் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் வலுவான சூழ்நிதையை உண்டாக்கும். எதிர்பார்த்திருந்த வேலை மாற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும். திறமைக்கான அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரிகள், தொழில் செய்பவர்களுக்கு நல்ல புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். நிதி ஆதாயத்தை பெறுவீர்கள். முதலீடு செய்ய இது நல்ல நேரமாக இருக்கும். உரிய ஆலோசனை பெற்று முதலீடு செய்வது நல்லது.












Click it and Unblock the Notifications