மேஷம் ராசிக்கு மே மாதத்தில் பெரிய மாற்றங்கள்.. முன்னேற்றமா? சவாலா?.. முழு பலன்கள் இதோ
மே மாத ராசி பலன்: 2026 மே மாதம் பிறக்கவுள்ளது. இந்த மே மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். கிரக நிலைகள் ஒவ்வொரு ராசிக்கும் வேறுபட்ட பலன்களை தரும் நிலையில், மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எப்படி அமையும்? எந்த கிரகங்கள் சாதகமாக உள்ளன, எவற்றில் கவனம் தேவை? இதோ மே மாத மேஷம் ராசிக்கான கிரக பலன்கள்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு மிகப்பெரிய நல்ல பலன்கள் கிடைக்கும். செவ்வாய் மாற்றம் இந்த மே மாதம் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தினத்தில் உங்கள் ராசியிலேயே செவ்வாய் பகவான் வந்து அமர்வதால் நல்ல உற்சாகம் உண்டாகும். யானை பலம் பெறுவீர்கள். நிறைய நல்லவைகள் நடக்கும் யோகம் உண்டு. எல்லா விஷயங்களிலும் வெற்றிகள், முன்னேற்றம் ஏற்படும்.
செலவு ஏற்படும்
2 ஆம் இடத்தில் சுக்கிரன் வலுவாக இருப்பதால் தன வரவு நன்றாக இருக்கும். செவ்வாய், சனி, புதன் 12 ஆம் இடத்தில் இருப்பதால் முதல் 10 நாட்கள் செலவுகள், வீண் விரையங்கள் போன்ற அமைப்புகள் இருந்தாலும் பிற்பகுதி 20 நாட்கள் அற்புதமாக இருக்கும். சிலருக்கு குடும்பம் அமையும். விரும்பும் நபரை மணக்கும் வாய்ப்பு ஏற்படும். சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும்.
அனுகூலம்
பிள்ளைகளாக இருந்து வந்த தொல்லையான அமைப்புகள் மாறும். அவர்களுடைய திருமணம், வேலை, தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல அனுகூலங்கள் காணப்படும். அற்புதமான பாக்கியங்கள் கிடைக்கும். கடன் தீரக்கூடிய அமைப்பு உள்ளது. கடனை அடைக்கும் வகையில் நல்ல வருமானங்கள் கிடைக்கும்.
முன்னேற்றம்
கடன், நோய் தீரும். வருமானம் உயரக்கூடிய அமைப்பு உள்ளது. தொழில் முனைவோருக்கு மே 11 ஆம் தேதிக்குப் பிறகு நல்ல ஆர்டர்கள் கிடைக்கும். வியாபாரிகள், விவசாயிகளுக்கு லாபகரமான மாதமாக இருக்கும். நம்பிக்கை ஏற்படும். மே 11 ஆம் தேதி நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியின் காரணமாக 45 நாட்களுக்கு செவ்வாய் இருப்பதால் நல்ல மேன்மைகள் ஏற்படும். மே மாதம் முதல் 6 மாதத்திற்கு படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படும்.
கவலை தீரும்
ஆண், பெண் இருபாலருக்கும், நடுத்தர வயது பெண்மணிகளுக்கும் கவலைகள், கணவர் பற்றிய கவலைகள் பரிபூரணமாக நீங்கும். யோகத்தை தரும் மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமையும். பணவரவு நன்றாக இருக்கும், குழந்தைகள் விஷயத்தில் ஏற்றம், கடன் தீர்வது என அனைத்து விதமான நல்ல முன்னேற்றங்களும் ஏற்படும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications