ஆடி மாத பலன் 2026: மேஷ ராசிக்கு ஆடி மாதத்தில் அதிர்ஷ்ட மழை.. பணம், பதவி, வெற்றி குவியுமா?

Subscribe to Oneindia Tamil

ஆடி மாத ராசி பலன்: ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறக்கப் போகிறது. அம்மனுக்கு உரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

குரு, சனி, ராகு, கேதுக்கள் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகளை வைத்து வருட பலன்கள் சொல்லப்படுகின்றன. சனிப்பெயர்ச்சி இரண்டரை வருடத்திற்கு ஒரு முறையும், குருப்பெயர்ச்சி 12 முதல் 13 மாதங்கள் வரைக்கும் குருவின் நிலையை வைத்தும் கணிக்கப்படுகின்றன. ராகு கேது பெயர்ச்சி ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும். ஒவ்வொரு மாதமும் சூரியன் இருக்கும் நிலையை வைத்து மாதப்பெயர்ச்சி கணிக்கப்படுகிறது.

mesham-rasi-aadi-month-horoscope-2026-career-finance-family-and-spiritual-benefits-for-mesham-ras

ஆடி மாதம் பிறக்கப் போகிறது. ஆடி மாதம் முழுவதும் சூரிய பகவான் கடக வீட்டில் இருக்கப் போகிறார். கடகத்தோடு சூரியன் சுபத்துவத்தோடு இருக்கும் தன்மை மிகப்பெரிய யோகத்தைத் தரும். சூரியதிசை, சூரிய புத்தி நடந்து கொண்டிருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஆடி மாதத்தின் நடுப்பகுதியில் அதவாது ஆகஸ்ட் 1 ஆம் தேதி சிம்மத்தில் இருக்கும் குரு நீச்சமடைகிறார்.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி செவ்வாய் ரிஷப வீட்டில் இருந்து மிதுனத்திற்கும், புதன் பகவான் ஆடி மாதம் 3 ஆம் வாரத்தில் சூரியனோடும், குருவோடும் சேரும் அமைப்புள்ளது. அந்த வகையில், ஆடி மாதத்தில் மேஷ ராசியினருக்கும் கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன்

மேஷ ராசியினருக்கு நல்ல பலன்கள் அதிகளவில் கிடைக்கும் வகையில் இந்த ஆடி மாதம் இருக்கும். உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான சூரியன் 4 ஆம் இடத்திற்கு மாறுகிறார். ராசிநாதன் செவ்வாய் 2 ஆம் இடத்தில் இருந்து 3 ஆம் இடத்திற்கு மாறுவது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். சுக்கிரன் 5 ஆம் இடத்தில் இருந்து 6 ஆம் இடத்திற்கு மாறி 12 ஆம் இடத்தில் இருக்கும் சனியை குரு, சுக்கிரன் இருவரும் பார்ப்பது பாதிப்புகளைக் குறைக்கும்.

யோகம்

விரய சனி இருப்பதால் காசு, பணம் வந்தாலும் கடும் நெருக்கடியிலேயே இருப்பீர்கள். அந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். சனிக்கு குரு சுக்கிரன் பார்வை இருப்பதாலும், 4 ஆம் இடத்தில் சூரியன் சுபத்துவம் பெற்றிருப்பதாலும் பிள்ளைகளுக்கு வேண்டியவற்றை செய்வீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்குவது, வண்டி, வாகனம் வாங்குவது போன்ற யோகம் உண்டாகும்.

நிம்மதி

எல்லாவற்றிலும் நிம்மதியைத் தரக்கூடிய மாதமாக இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் 2, 3, 4 ஆவது வாரத்தில் ராசிநாதன் செவ்வாய் 3 ஆம் இடத்திற்குப் போவதால் மாதத்தின் முதல் பகுதி ஆடி மாதம் 15 நாட்கள் ஒருவித பலன்களையும், இரண்டாம் பகுதி சில பலன்களையும் தரக்கூடும். முதல் 15 நாட்கள் பண வரவுகள் கஷ்டங்கள், செலவுகள் இருக்கக்கூடிய தன்மை ஏற்படும்.

லாபம் கொட்டும்

இரண்டாம் பகுதி 15 நாட்கள் நல்ல அறிமுகம் கிடைக்கும். ஆணுக்கும், பெண்ணுக்கும் நல்ல அறிமுகம் கிடைக்கும். பங்குச் சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பார்க்காத லாபம் உண்டு. நண்பர்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும் அமைப்பு உள்ளது. பெரிய மனிதருடைய அறிமுகத்தால் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லக் கூடிய அமைப்பு உள்ளது.

அனுகூலம்

பெண்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய மாதமாக இந்த ஆடி மாதம் உங்களுக்கு கண்டிப்பாக அமையும். பெண்கள் பலரும் கடந்த மாதங்களில் கோபப்பட்டுக் கொண்டிருந்திருப்பீர்கள். கணவர், குழந்தைகள் மூலமாகவும், இளம்பெண்களுக்கு காதலன் மூலமாகவும் மன அழுத்தம் இருந்திருக்கும். அந்த நிலைமைகள் எல்லாம் இந்த ஆடி மாதம் பரிபூரணமாக நீங்கும். 8, 10, 12 ஆம் இடங்கள் சுபத்துவம் பெற்றிருப்பதால் ஒரு சிறிய பயணத்தின் மூலமாக மேன்மையும், பணவரவும் உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+