Rasi Palan This Week: மேஷ ராசிக்கு 7 நாட்களில் அடிக்கும் ஜாக்பாட்.. திடீர் பணவரவு கன்ஃபார்ம்
Mesham Rasi Palan: ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் மேஷத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)
மேஷம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்கள் பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்மறையான கருத்துகள் யாராவது உங்களைப் பற்றி சொன்னாலும் கண்டு கொள்ளாமல் செல்வது நல்லது. யாரிடமும் தர்க்கம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் உங்கள் தலையீடு, உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.
திடீர் பண வரவு
மேஷம் ராசியில் சூரியன் வந்துள்ளது. இந்த மாதத்தில் இருந்து உடற்பயிற்சியை ஆரம்பிப்பது ஏற்றத்தை ஏற்படுத்தும். சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களில் ஈடுபடுபவர்களின் தொடர்புகளை துண்டிப்பது நல்லது. கையெழுத்து போடுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது ஏற்றத்தைத் தரும். இந்த வாரத்தில் திடீர் பணவரவு, பயணங்கள், சந்தோஷம் ஏற்படும்.
ஆரோக்கியம்
ஒரு சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து செல்வதற்கான வாய்ப்புள்ளது. காசு பணத்திற்கு குறைவே இல்லாத மாதமாக இருக்கும். சந்தோஷம் அற்புதமாக இருக்கும். கால் பாதங்களில் பாதிப்பு வருவது, சுழுக்குவது போன்றவை ஏற்படும். தினந்தோறும் வியர்வை வரும் அளவுக்கு உடற்பயிற்சி செய்வது மேன்மையைத் தரும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றத்தைக் கொடுக்கும்.
கவனம்
எல்லா காரியங்களும் திருப்தியாக நடக்கும். தெய்வ அனுக்கிரகம், முன்னோர்களின் அனுக்கிரகம் உள்ளதால் அற்புதமான வாரமாக இருக்கும். கையெழுத்திடக்கூடிய ஆவணங்களில் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தினமும் காலையில் எழுந்தவுடன் பசு நெய்யை நாக்கில் தடவுவது நன்மையைத் தரும்.
வழிபாடு
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். ஏற்றத்தை தரக்கூடிய வாரமாக இருக்கும். தொட்டது துலங்கும். கையிருப்பு பணம் அதிகமாக இருக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சுவாமி மலை முருகப் பெருமான் வழிபாடு, அனுமன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: குரு பகவானின் அருளால் மீன ராசிக்கு வாழ்க்கை மாறப் போகிறது! -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு இந்த வாரம் காத்திருக்கும் மாற்றம்.. எந்ததெந்த விஷயங்களில் கவனம்? -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு ஜூன் 7க்குள் வரப்போகும் குட்நியூஸ்.. அதிர்ஷ்டம் காத்திருக்குது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications