Rasi Palan This Week: மேஷ ராசிக்கு லாபம் கொட்டும்.. செலவுகள் விஷயத்தில் கவனம்
Mesham Rasi Palan: ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை, சித்திரை 14 ஆம் தேதி முதல் சித்திரை 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் மேஷத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை, சித்திரை 14 ஆம் தேதி முதல் சித்திரை 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)
மேஷம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு நிறைய லாபங்கள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் விஷயத்தில் நண்பர்கள் போல இணக்கமாகச் செல்வது நல்லது. சித்திரை மாதம் முழுவதும் மேஷ ராசியினர் 2 வேலை மட்டும் உணவு எடுத்துக் கொள்வது நல்லது. நிறைய ஏற்றம் கிடைக்கும் அமைப்பு உள்ளது.
ஜெயம்
சூரியன் உச்ச ஸ்தானத்தில் இருப்பது நினைத்த காரியங்கள் நடக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். அப்பாவின் துணை கிடைக்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீங்கள் வேலை விடுவது, உங்கள் பாஸ் வேலையை விடுவது, இடமாற்றம் ஏற்படுவது போன்றவை ஏற்படும்.
கடன் தீரும்
குரு உச்ச நிலையைப் பார்த்து நகர்ந்து கொண்டிருப்பதால் ஏற்றுமதி, இறக்குமதி வேலை, வெளிநாட்டில் செட்டிலாகும் யோகம் போன்றவை உண்டு. கடன்களை அடைக்கும் யோகம் உண்டு. வருமானங்கள் நன்றாக இருக்கும். இருப்பினும் தேவையில்லாத தண்ட செலவுகள் ஏற்படும். மனது ஒருவிதமாக தொந்தரவு செய்து கொண்டிருக்கும்.
ஆரோக்கியம்
வாரத்தின் பிற்பகுதியில் அற்புதமாக இருக்கும். எல்லா பிரச்சனைகளும் சரியாகும். வயிறு தொடர்பான விஷயங்களில், அசிடிட்டியில் கவனமாக இருக்க வேண்டும். இரவில் சாப்பாடு சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வழிபாடு
மேஷ ராசியினர் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். தினந்தோறும் அனுமன் சாலிஷா கேட்பது, படிப்பது நன்மையைத் தரும். சுற்றிலும் நேர்மறையான விஷயங்களை வைத்துக் கொள்வது நல்லது. அபிராமி அந்தாதியை கேட்பது, படிப்பது மேன்மையைத் தரும். ராஜகோபால சுவாமி வழிபாடு செய்வது அனைத்து விதமான முன்னேற்றத்தைத் தரும். சந்தோஷம் 70 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 70 சதவீதமும் நன்றாக இருக்கும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications