Rasi Palan This Week: மேஷ ராசியினருக்கு வரும் குட்நியூஸ்.. தவிர்க்க வேண்டிய ஒரு விஷயம்!
Mesham Rasi Palan: மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.
அந்த வகையில், மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)
மேஷ ராசியினர் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் நம்மை நோகடிக்கும் வகையில் பேசுவார்கள். உங்ளிடம் நிறைய உதவிகளை எதிர்பார்த்து உறவினர்கள், நண்பர்கள், அலுவலக ஊழியர்கள் ஏளனமாகப் பேசுவதற்கான வாய்ப்புள்ளது. தெய்வ பலம் அதிகளவில் உங்களுக்கு இருக்கும். தேவையில்லாமல் உணர்ச்சிவசப்படுவது, சாபம் விடுவது, கத்துவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
குட்நியூஸ்
ஆன்மாக்கள் சக்தி அதிகம் கொண்ட ராசி என்பதால் மூதாதையர்களை மனதார வழிபாடு செய்து கொள்வது நல்லது. தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜிம், யோகாசனம், தியானம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். புதிய வண்டி, வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகும்.
யோக பலன்
முதலீடுகளை சரியாக செய்வீர்கள். இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும். தொழில், உத்தியோகம் ரீதியாக செல்வாக்குகள் கூடும். யோக பலன்களை அதிகளவில் பெறும் காலகட்டம். எந்த விஷயத்தையும் எண்ணி யோசித்துக் கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. வார்த்தைகளில் மட்டும் அதீத கவனம் வேண்டும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மன அமைதி உண்டாகும். யாரேனும் உங்களைப் பற்றி தவறாகப் பேசினால் அதனை கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது. நீங்கள் பிறந்த கிழமைகளில் ஏழைகளுக்கு அன்னதானம் கொடுப்பது மேன்மையைத் தரும். ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி தொடர்பான விஷயங்களில் மிகுநத் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். மேஷ ராசியினருக்கு துர்க்கை வழிபாடு, வாராஹி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
ஜூன் 2026 அதிர்ஷ்ட ராசிகள்: குரு, சுக்கிரன், செவ்வாய் அருளால் முன்னேற்றம் காணும் 5 ராசிகள்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications