Rasi Palan This Week: மேஷ ராசிக்கு 7 நாட்களில் வரும் குட்நியூஸ்.. ஒரு விஷயத்தில் மட்டும் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு யோகம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த மனக் கசப்புகள், மன தாங்கல்கள் அனைத்தும் தீரும். பெரிய மனிதர்களின் சந்திப்புகள் உண்டாகும். தெய்வ வழிபாடுகளை செய்து மகிழ்வீர்கள். வெளியூர் சென்று வருவீர்கள். பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் நிம்மதி பெருமூச்சு விடும் காலகட்டமாக இருக்கும்.
குட்நியூஸ்
தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். மனதில் இருந்து வந்த பாரங்கள் குறையும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் நடக்கும். வியாபாரத்தில் மிகப்பெரிய ஏற்றங்கள் உண்டாகும். மகான்களை தரிசனம் செய்வீர்கள். குடும்பத்தாருடன் இருந்து வந்த மனத் தாங்கல்கள் நீங்கும். எல்லா காரியத்தையும் மகிழ்ச்சியுடன் செய்து முடிப்பீர்கள்.
உணவு விஷயத்தில் கவனம்
தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தையும் நடத்தி முடிப்பீர்கள். வெளியிடம் எல்லாம் சென்று வருவதால் உணவு விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால் உடற்பயிற்சி செய்வதை தவறாமல் கடைப்பிடிப்பது நல்லது. தொழில் ரீதியாக அற்புதமான காலகட்டமாக இருக்கும். உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு தொடர்பான விஷயங்களில் ஏற்றத்தைக் காண்பீர்கள்.
பணவரவு
பணவரவு உண்டாகும். அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி உண்டாகும். நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். தொடர்ச்சியாக இருந்து வந்த கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். குடும்பத்தில் பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.












Click it and Unblock the Notifications