Rasi Palan This Week: மேஷ ராசிக்கு நிலம், வீடு வாங்கும் யோகம்.. பேச்சில் மட்டும் கவனம்
வார ராசி பலன்: டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு எல்லா விதத்திலும் நல்ல அனுகூலங்கள் காணப்படும். தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிலம், வீடு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். யோக பலத்தை அதிமாகப் பெறும் காலகட்டம். நிலம், வீடு, முதலீடுகளில் கார்த்திகை முடிவதற்குள் நல்ல விஷயங்கள் நடக்கும்
நிதானத்துடன் இருப்பது பெரிய வெற்றிகளையும், சந்தோஷத்தையும், அனுகூலத்தையும் கொடுக்கும். இதுவரை தடைபட்டு வந்த விஷயங்கள் எல்லாம் இனி டக்கு டக்கென்று நடக்கும். குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடுகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். அதீத அலைச்சல்கள், வேலைகளால் சலிப்பு ஏற்படும்.
தர்க்கம் வேண்டாம்
எந்தவொரு விஷயத்தையும் சிஸ்டமேட்டிக்காக செய்யாதது, அந்தந்த சமயத்தில் இருக்கும் விஷயங்களுக்கு ஒத்துக் கொள்வது பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால், மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் யாரிடமும் தர்க்கம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இல்லையெனில் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் வயிறு, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவற்றில் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. விநாயகர், அனுமன் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.
நிலம், வீடு வாங்கும் யோகம்
சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் வீட்டில் இருப்பதால் சிலருக்கு அடிவயிறு, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. 3 ஆம் இடத்தில் குரு வக்கிரமாக செவ்வாயின் பார்வையில் இருப்பதால், நிலம் வாங்குவது, வீடு வாங்குவது, விற்பது, அண்ணன் தம்பியுடன் நல்ல உறவுகள் அமைவது போன்ற யோகங்கள் ஏற்படும்.
இரவு நேரத்தில் பயணம் செய்வது, வாகன விபத்து, காலில் அடிபடுவது போன்ற விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சந்தோஷமும் பொருளாதாரமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications