Rasi Palan This Week: சொல்லி அடிக்கும் மேஷ ராசி.. முருகர் வழிபாடு முன்னேற்றத்தை தரும்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு அலைச்சல்கள் படிப்படியாக குறையும். கெளரவம் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். அவசரப்படாமல் சாதாரணமாக எல்லா காரியங்களையும் செய்வது நல்லது. ஓய்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. உள்ளூர் பயணம், வெளியூர் பயணம், கடல் கடந்த பயணங்கள் முன்னேற்றத்தை தரும்.
பாதிப்புகள் நீங்கும்
வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் பரிபூரமணமாக நீங்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள். சுப காரியத்தில் இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் படிப்படியாக நீங்கும். திருமணத் தடைகள், புத்திர சந்தானத் தடைகள் நீங்கும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த சண்டைகள், குடும்பப் பிரச்சனைகள் சரியாகும்.
தொழிலில் லாபம்
இன்டீரியர் டெக்கரேட் செய்வீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். யாத்திரைகளுக்கு திட்டமிடும் யோகம் ஏற்படும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு, லாபம் ஏற்படும். உங்களுடைய செல்வாக்கு, மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். இதுவரை தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள்.
தொட்டது துலங்கும்
தொழில் ஏற்றம், உத்தியோக ஏற்றம், வியாபார ஏற்றம், படிப்பு ஏற்றம் என அனைத்துவிதமான ஏற்றங்களும் உண்டாகும். இழுபறியாக இருந்த விஷயங்கள் மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றிகளைர் பெறுவீர்கள். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும்.
பிரிந்தவர்கள் சேரும் யோகம்
பெற்றோருக்கும், உங்களுக்கும் இருந்து வந்த மனத் தாங்கல்கள் நீங்கும். உறவுக்காரர்கள் குடும்பத்தை விட்டு உங்களைப் பிரித்திருந்தாலும் மீண்டும் அவர்களே உங்கள் மேல் பாசம் கொண்டு ஓடி வருவார்கள். பழைய விஷயங்களை சொல்லி குத்திக் காட்டாமல் இருப்பது நல்லது. மன்னித்து நிற்பது நன்மை பயக்கும். தெய்வத்தின் அனுக்கிரகம் பரிபூரணமாக இருப்பதால் மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது நல்லது.
வழிபாடு
மேஷம் ராசியினருக்கு முருகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். வியாழக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது நன்மையைத் தரும். தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். வயிறு, நரம்பு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
-
June Rasi Palan 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் எப்படி? -
ஆனி மாத பலன்: ராஜயோகத்தைப் பெறும் மேஷம் ராசி.. இந்த மாதத்தை தவற விட்டுடாதீங்க -
மகரம், கும்பம், மீனம் ராசிக்கு ஜாக்பாட் அடிக்குமா?.. ஜூன் மாதம் வரும் அற்புத மாற்றம் -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications