Rasi Palan This Week: மேஷ ராசிக்கு 7 நாளில் நடக்கும் மாற்றம்.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு மனைவி, காதல் அமைப்பு, குடும்பத்தில் மனத் தாங்கல்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். அந்த அலைச்சல்கள் எல்லாம் விரைவில் சரியாகக் கூடிய வாய்ப்பு ஏற்படும். பதட்டமில்லாமல் இருக்க வேண்டும். தெய்வ வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குலதெய்வத்துக்கு அல்லது இஷ்ட தெய்வத்துக்கு அர்ச்சனை, வழிபாடுகள் செய்வது நல்லது.
கவனம்
கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள் கோயிலில் சொல்லி குடும்பத்தின் பேரில் அர்ச்சனை, சங்கல்பம் செய்து கொள்வது நன்மையைத் தரும். ஆரோக்கியத்தில் கண்டிப்பாக ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு, மன அழுத்தம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எதையாவது ஒன்றை யோசித்துக் கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது.
உடற்பயிற்சி முக்கியம்
செல்போனை பார்த்துக் கொண்டே இருப்பது, தேவையில்லாத வேலைகளை இழுத்துப் போடுவதை தவிர்ப்பது நல்லது. எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்று நினைப்பதை தவிர்ப்பது நல்லது. தினந்தோறும் 30 நிமிடமாவது உடற்பயிற்சியை செய்து கொள்வது நன்மையைத் தரும். பண வரவிற்கான உத்தரவாதம் ஏற்படும். நிறைய நன்மைகள் நடக்கும்.
அனுகூலம்
முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் இருக்காது. பண வரவுக்கான உத்தரவாதங்கள் ஏற்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும். இழுபறியாக இருந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழிலில் நல்ல அனுகூலம் ஏற்படும். வேற்று மதத்தினரால் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும்.
பாக்கியம்
மனதை நிம்மதிப்படுத்தும் வகையில் கோவிலுக்கு அல்லது பயணங்கள் மேற்கொள்ளும் பாக்கியம் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து லாபங்கள், முதலீடுகள் ஏற்படும். எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் துணையின் விஷயத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இல்லையெனில் பாதிப்பை சந்திக்க நேரிடும். பிறர் குடும்ப விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
-
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Thulam Rasi Palan: துலாம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. மறந்தும் இந்த விஷயங்களை செய்திடாதீங்க -
கோடீஸ்வர யோகம் பெறும் விருச்சிக ராசி.. வேலை விஷயத்தில் வரப்போகும் ஆபத்து.. கவனம் -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது












Click it and Unblock the Notifications