Rasi Palan This Week: மேஷ ராசிக்கு புது வீடு, கார் வாங்கும் யோகம்.. வாக்குவாதம் வேண்டவே வேண்டாம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Weekly rasi palan Mesham Lucky zodiac signs

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.

அந்த வகையில், நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு எல்லோரிடமும் பொறுமையாக நடந்து கொள்வது நல்லது. வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அலைச்சல்கள் அதிகரிக்கும். வேலைப் பளு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. துணையின் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உள்ளூர் பயணங்கள், கடல் கடந்த பயணங்கள் ஏற்றத்தைக் கொடுக்கும்.

முதலீடுகள்

மேலதிகாரிகளுக்கும், உங்களுக்கும் இருந்த தாக்கங்கள் பரிபூரண நிவர்த்தை ஏற்படுத்தும். எடுத்த காரியங்களில் வெற்றியைப் பெறுவீர்கள். நம்பிக்கை ஏற்படும். இதுவரை தடைபட்டு வந்த காரியங்கள், இழுபறியாக இருந்து கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் இனி அடுத்தடுத்து நடக்கும். முதலீடுகளுக்கு எந்தவித குறையும் இருக்காது.

நிலம், வீடு வாங்கும் யோகம்

நிலம் வாங்குவது, வீடு வாங்குவது, மண் வாங்குவது போன்ற விஷயங்களில் அடுத்தடுத்து அனுகூலமும், ஏற்றமும் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். கொடுத்த வாக்குகளை காப்பாற்ற முடியாமல் தவித்திருப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள், காதல் அமைப்பில் கூறிய விஷயங்களை எல்லாம் செய்ய முடியாமல் அவதிப்பட்டிருப்பீர்கள். இந்த வாரம் அதற்கு உண்டான முயற்சிகள் எல்லாம் வெற்றி பெறும்.

செல்வாக்கு கூடும்

சமுதாயத்திலும், குடும்பத்திலும் உங்களுடைய செல்வாக்குகள் கூடும். நல்ல யோக பலன்கள் கிடைக்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். உத்தியோக ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் கட்டாயம் வெற்றி ஏற்படும்.

வழிபாடு

துர்க்கை, அனுமன் , விநாயகரை வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். தெய்வ மந்திரங்களைக் கேட்பது, அனுமன் சாலிஷாவை கேட்பது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+