Rasi Palan This Week: மேஷ ராசியினரே டைரில குறிச்சு வெச்சுக்கோங்க.. 7 நாட்களில் அற்புதமான மாற்றம்
வார ராசி பலன்: அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 20 முதல் 26 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்து நிறைவடைந்துள்ளது. அக்டோபர் 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு நிறைய அலைச்சல்கள் உண்டாகும். திட்டமிட்டு உங்கள் வேலைகளைச் செய்து கொள்வது நல்லது. பெரிதாக யோசிக்கத் தேவையில்லை. உங்கள் குடும்பத்துக்குள் மற்றவர்கள் தலையிடுவதையும், மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதையும் தவிர்த்துக் கொள்வது நல்லது. காதல் அமைப்பில் கோபப்படாமல் இருக்க வேண்டும்.
முதலீடு
அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். முதலீடுகளுக்கு எந்தவித குறையும் இருக்காது. தொழில் அமைப்பில் ஏற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். எந்த வேலைகளும் உங்களை பாதிக்காது. மற்றவர்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி கவலை கொள்ளாமல் இருப்பது நல்லது. எந்த விஷயத்தையும் கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லது.
வழிபாடு
நம்முடைய நேரம் நன்றாக இருக்க தெய்வ வழிபாடு மிகவும் முக்கியம். வெள்ளிக்கிழமை தோறும் பெருமாள், அனுமன், தாயாரை வழிபாடு செய்வது அற்புதமான மாற்றத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும். கணவராக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவரிடம் இணக்கமாகச் செல்வது நல்லது.
சுபகாரியம்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு போன்ற அனைத்து விஷயங்களிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரியவர்கள் விஷயத்தில் அனுகூலம் காணப்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் மேன்மை ஏற்படும். சுபகாரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். அடுத்தடுத்து நல்ல காரியங்கள் வீட்டில் நடக்கத் தொடங்கும்.
குலதெய்வ வழிபாடு
எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் ரீதியாக அபரிமிதமான முன்னேற்றம் காணப்படும். பயணங்களால் சந்தோஷம் காணப்படும். பதவி உயர்வு கிடைக்கும். கெளரவம் உண்டாகும். குலதெய்வத்தை மானசீகமாக பிரார்த்தனை செய்வது நல்லது. நீண்ட நாட்களாக மனதில் இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.
தடை நீங்கும்
பெரிய பெரிய தொழில்கள் 10 ஆம் தேதிக்குப் பிறகு வெற்றிகரமாக செய்யத் தொடங்குவீர்கள். நல்ல தொழில் மாற்றம் ஏற்படும். படிப்பில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். ஆணாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முதுகு, கால் தொடர்பான விஷயங்களில் கவனமாகவும், உடற்பயிற்சி செய்வதும் அவசியம்.












Click it and Unblock the Notifications