ஆகஸ்ட் 17 - 23 மேஷ ராசி பலன்.. நினைத்தது நிறைவேறும் யோகம்.. தொட்டது துலங்கும்
Weekly Rasi Palan: ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசியினருக்கு பிள்ளைகள் விஷயத்தில் அதிக கோபம் கொள்ளாமல் இருப்பது நல்லது. பிள்ளைகளிடம் இணக்கமாகச் செல்ல வேண்டும். அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுப்பது நன்மை பயக்கும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் மிகப்பெரிய ஏற்றங்கள் ஏற்படும். நினைத்து பார்க்காத அளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும்.
யோகம்
பெரிய கெளரவங்கள் ஏற்படும். நினைத்த காரியங்கள் நடக்கும் யோகம் உண்டாகும். செவ்வாய் நல்ல நிலையில் இருப்பதால் வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நிலம், வீடு சம்பந்தப்பட்ட விஷயங்கள், லோன் போன்றவை கிடைக்கும் அமைப்பு உள்ளது. பழைய கடன்களை அடைத்து முடிப்பதற்கான யோகம் உண்டாகும். பெரிய பலம் உண்டாகும்.
குட்நியூஸ்
குடும்பம், தொழில், குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான விஷயங்களில் அற்புதமான மாற்றங்களும், சுப செய்திகளும் உண்டாகும். மன தைரியம் அதிகமாக இருக்கும். நண்பர்களால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். நிறைய பேருக்கு இடமாற்றம் ஏற்படும். புதிய விஷயங்களை எடுத்து அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
ஆரோக்கியம்
நல்ல விஷயங்கள் ஏராளமாக நடக்கும். பிள்ளைகள், உங்களின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். நெஞ்சு எரிச்சல், உணவு ஒவ்வாமை போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. மயக்கம், வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புள்ளவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். துர்க்கை, முருகர் வழிபாடு சகலவித நன்மைகளையும் தரும்.
வழிபாடு
பெண்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. இனிப்பு கடை, உணவகம், கேண்டீன் வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். அனந்தபத்மநாபன் வழிபாடு ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதாரமும் 75 சதவீத நன்மையைக் கொடுக்கும்.


Click it and Unblock the Notifications
