பிப்ரவரி மாத பலன்: மேஷ ராசிக்கு 30 நாட்களில் வரும் குட்நியூஸ்.. வேலையில் அடிக்கும் ஜாக்பாட்
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் செவ்வாய் உச்சமாக அமர்ந்திருக்கிறார். மிகப்பெரிய மேன்மைகள் தேடி வரக்கூடிய மாதமாக இருக்கும். முயற்சிகளில் பெரும் வெற்றி உண்டாகும். சூரியனும் 10 ஆம் இடத்தில் இருப்பதால் வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சூரியன், செவ்வாயின் இணைவு அரசு வேலையைப் பெற்றுத் தரும்.
சொத்துகள் கிடைக்கும்
தந்தை வழி உறவுகளால் சாதகமான சூழல் ஏற்படும். பூர்வீகச் சொத்துகளுக்கான முயற்சிகள் வெற்றி பெறும். பூர்வ புண்ணியாதிபதியான சூரியன் 10, 11 ஆம் இடத்தில் அமருவதால் நல்ல வேலை கிடைக்கும், சொத்துகள் கிடைக்கும் யோகம் உண்டாகும். அரசுத் துறையில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நல்ல வேலை மாற்றங்கள் உண்டாகும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
பதவி உயர்வு
இடமாற்றம் உண்டாகும். உயர்ந்த பதவி, சம்பள உயர்வு கிடைக்கும். பெண் குழந்தைகள் பிறக்கும் மேஷ ராசியினருக்கு மிகப்பெரிய யோகம் உண்டாகும். அஸ்வினி நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் இந்த காலகட்டத்தில் நட்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பரணி நட்சத்திரத்தச் சேர்ந்தவர்களுக்கு பெண்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். கணினி துறையில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
திருமண யோகம்
திருமணம் உறுதியாகும் யோகம் உண்டு. கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் யோகம் உள்ளது. அப்பாவுடைய சொத்துகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பகவான் 3 ஆம் இடத்தில் இருப்பது முயற்சிகளில் நல்ல பலனைக் கொடுக்கும்.
முருகர் வழிபாடு
பிப்ரவரி மாதம் உங்களுக்கு சாதகமான மாதமாக இருக்கும். சளி தொந்தரவுகள், மூச்சு, வயிறு, வாயுப் பிரச்சனைகள், மூட்டு வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக எடுக்கும் பெரிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் யோகம் உண்டு. ஆராய்ச்சி தொடர்பான கல்விப் படிப்பை படிப்பதற்கான யோகம் உண்டு. திருப்பரங்குன்றம் முருகனைச் சென்று வழிபடுவது ஏற்றத்தைத் தரும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications