Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு அஷ்டமசனி அச்சம் வேண்டாம்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மாதம்
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். கார்த்திகையில் நிறைய விசேஷங்கள் நடக்கும். ஐயப்ப பக்தர்கள் லட்சக்கணக்கானோர் மாலை போடும் காலம். கார்த்திகை தீபம் வரும் மாதம். நவம்பர் 17 முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரையிலான கார்த்திகை மாதம்.

கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை தீபம் மிகவும் பிரதானமானதாகும். வீட்டில் ஒற்றைப் படையில் தீபமேற்றுவது நன்மை பயக்கும். கார்த்திகை மாதம் முழுவதும் சோமவாரம் எனும் திங்கள்கிழமை விசேஷமான காலமாகும். சிவன் கோயிலில் நடைபெறக்கூடிய சங்காபிஷேகத்தில் கலந்துகொள்வது, அபிஷேகத்தில் கலந்துகொள்வது நன்மையை ஏற்படுத்தும்.
பரிகாரம்
கடன் குறைய வேண்டும், தேக ஆரோக்கியத்தில் பலம் பெற வேண்டும் என்றால் கோயிலுக்கு பழங்கள் வாங்கிக் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும். கடன் குறைய வேண்டும் என்றால் திங்கள்கிழமை தோறும் பச்சரிசி வாங்கிக் கொடுப்பது நன்மை பயக்கும். பஞ்சாங்கத்தின்படி, கார்த்திகை மாதத்தில் கன மழை பெய்யும். தமிழகம் முழுவதும் வெள்ளக் காடாக மிதக்கும் சூழ்நிலை ஏற்படும். இந்த கார்த்திகை மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு பதட்டம், படபடப்பு, கோபம், வருத்தம் போன்றவை ஏற்படும். கவனமாக இருக்க வேண்டும். உணவு சரியாக ஜீரணமாகாது. தூக்கமின்மை ஏற்படும். தேவையில்லாதவற்றை யோசித்து குழப்பிக் கொள்வீர்கள். ரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவற்றுக்கு சரியான மருந்துகள் எடுத்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
வழிபாடுகள்
மேஷம் என்றாலே வயிறு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் இந்த மாதத்தில் அதிகமாக இருக்கும். விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு தினந்தோறும் செய்வது நல்லது. ஆஞ்சநேயர், விநாயகர், பெருமாள், சிவன் கோயில்களுக்கு கல் உப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் போன்றவற்றை தானமாகக் கொடுப்பது நல்லது. இதனை தானமாக கொடுத்தால் உங்களுக்கு இந்த கார்த்திகை மாதத்தில் பெரும் சிக்கல்கள் ஏற்படாது.
முக்கிய விஷயங்களில் கவனம்
மேலதிகாரிகள் விஷயத்தில் கோபம் இல்லாமல் இருப்பது நல்லது. வருமான வரி, ஜிஎஸ்டி போன்றவற்றை சரியாக கட்டி முடிப்பது நல்லது. எல்லா விஷயங்களையும் ஏதோ ஒரு நோட்டில் எழுதி வைத்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் முக்கியமான விஷயங்களை மறக்கும் சூழ்நிலை ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை, டாக்குமென்ட் விஷயங்கள், சொத்து வாங்கும் விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
பண வரவு கொட்டும்
பண வரவு நன்றாக இருக்கும். பெரிய அளவுக்கான அனுகூலம் ஏற்படும். அஷ்டமத்தில் சூரியன் வந்திருப்பதால் அச்சப்படத் தேவையில்லை. அதிசாரத்தில் குருவின் பார்வை இருப்பதால் தொழில் நிச்சயமாக ஏற்றம் பெறும். அனுகூலம் ஏற்படும். தொழில் நிமித்தமான பயணங்கள் ஏற்றம் தரும். ஏழரை சனி நடைபெறுவதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications