Mesham: மேஷம் ராசிக்கு பணத்தை அள்ளும் யோகம்.. தொழிலில் கொட்டும் அதிர்ஷ்டம்
March month rasi palan: மார்ச் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மேஷம் ராசியினருக்கு மார்ச் மாதத்தில் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மார்ச் மாதத்தில் கும்ப ராசியில் ராகு, செவ்வாய், புதன் ஆகிய கிரகஹ்கள் மாதம் முழுவதும் அங்கேயே இருக்கின்றன. குரு பார்வையில் இருப்பதால் பெரிய அளவில் முன்னேற்றத்தைத் தரும். மாதத்தின் பிற்பகலில் சுக்கிரன் உச்சத்தை அடைகிறார். குருவுக்கு நிகரான மிகப்பெரிய சுபரான சுக்கிரன் உச்சத்தை அடைவதால் பெண்கள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். பெண்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டக் கூடிய தன்மை ஏற்படும்.

ஆண்களால் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். சனி பகவான் உச்ச சுக்கிரனோடு சேர்ந்து சுபத்துவத்தை அடைவதால் தொழிலாளர் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தினருக்கு நன்றாக இருக்கும் காலகட்டம். சிலருக்கு காதல் மலரும். அந்த வகையில் இந்த மார்ச் மாதத்தில் மேஷம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம் மார்ச் மாத பலன்
மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாற்றம், முன்னேற்றம் நிறைந்த மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் குருவின் பார்வையில் மாதத்தின் பெரும் பகுதியில் இருப்பதால் மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். 12 ஆம் இடத்தில் ஏழரை சனி என்பதால் கையில் பணமே தங்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த செலவை கொடுத்துக் கொண்டிருக்கும் சனி உச்ச சுக்கிரன் சுபத்துவப்படுத்துவதால் பணத்தை சேமிக்கும் யோகம் உண்டாகும்.
வெளிநாடு யோகம்
வேலை மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். வெளிநாடு, வெளிமாநிலம் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மார்ச் 15 ஆம் தேதிக்குப் பிறகு அதற்கான அனுமதிகள் கிடைக்கும். மிகப்பெரிய நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். முயற்சிகல் பலிக்கும் நல்ல காலகட்டம். நல்ல நல்ல நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும்.
திருமண யோகம்
சட்டப்பூர்வமான போராட்டங்களில் இருப்பவர்களுக்கு அதற்கான வெற்றிகள் கிடைக்கும். காவல் துறை, கோர்ட் போன்ற விஷயங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதற்கான தீர்வுகளும், தீர்ப்புகளும் கிடைக்கும் மாதமாக இருக்கும். திருமண யோகம் உண்டாகும். திருமணத்தை உறுதி செய்வீர்கள். சுக்கிரன் உச்சமாக இருப்பதால் காதல் மலரும். காதல் வாழ்க்கை இனிக்க ஆரம்பிக்கும்.
குரு பார்வை
கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்து போன என்ற எண்ணம் இருந்தவர்களுக்கு சேர்ந்து வாழ வேண்டும் என்கிற தன்னம்பிக்கை நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். பெரிய சோதனைகள் எதுவும் கண்டிப்பாக இருக்காது. கடன், நோய் சார்ந்த விஷயங்களில் இருந்து விடுதலை பெறுவீர்கள். 11 ஆம் இடத்தில் ராசிநாதன் வலுத்திருந்து குருவின் பார்வை இருப்பதால் நல்ல லாபங்கள் கிடைக்கும்.
லாபம் கொட்டும்
வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரும்பகுதி அமைப்புகள் மிகவும் நன்றாக இருக்கும். எல்லா விஷயங்களிலும் நன்மைகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications