Rasi Palan This Week: மேஷ ராசிக்கு வரும் 10 நாட்கள் ரொம்ப கவனம்.. சுத்துப் போடும் கிரகங்கள்

Subscribe to Oneindia Tamil

Mesham Rasi Palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த வாரம் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

mesham-rasi-palan-what-kind-of-benefits-will-get-mesham-rasi-people-during-this-week

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த வாரம் முக்கியமான வாரம். வாழ்வில் முன்னேற்றம் பெற தை அமாவாசை தினமான இன்று முன்னோர்களை வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும். பசு மாடுகளை தானமாக அளிக்கலாம். 19 ஆம் தேதி புண்ணிய நதிகளில் நீராடுவதால் கர்மாவுக்கான கடன்கள் நிவர்த்தியாகும். 25 ஆம் தேதி ரதசப்தமி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் சூரிய பகவானை வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.

இந்த வாரம் மிக முக்கிய கிரகப் பெயர்ச்சியான புதன் பெயர்ச்சி நடைபெறுகிறது. தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு புதன் பெயர்ச்சியாகிறார். அந்த வகையில் இந்த தை மாதத்தில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)

மேஷம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு வேலையில் டாக்குமென்டேஷன், மெமோ வாங்குவது, நோட்டீஸ், எழுத்துப்பூர்வமாக வருத்தம் தெரிவிப்பது, பதிலளிப்பது போன்ற சூழல் ஏற்படும். மெடிக்கல், அரசுத் துறை, மத்திய அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக நோட்டீஸ் வரும். தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்புள்ளது.

பிரச்சனைகள்

படிப்பில் தடை ஏற்படும். அலுவலகத்தில் வேலையில் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. வேலை, தொழில், உத்தியோகம், அந்தஸ்து, வியாபாரத்தில் மட்டுமே இந்தப் பிரச்சனைகள் ஏற்படும். வரும் 10 நாளைக்கு மட்டுமே இதுபோன்ற சூழல்கள் ஏற்படும். கையெழுத்து போடுவது, டாக்குமென்டேஷன் போன்ற விஷயங்களில் கவனம் தேவை. மாமாக்களுக்கு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

மகிழ்ச்சி

அனுகூலம், சந்தோஷம் ஏற்படும். உடற்பயிற்சியைக் கடைப்பிடிப்பது நல்லது. தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தொடர்ச்சியாக பயணம் மேற்கொள்வீர்கள். பெரிய மனிதர்களை சந்திக்கும் யோகம் உண்டாகும். முதலீடுகளில் லாபங்கள் கிடைக்கும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். வியாபாரம், படிப்பு, வேலையில் மாற்றங்கள் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும்.

முதலீடு

சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். முதலீடுகளுக்கு குறைவிருக்காது. திட்டமிட்டு வீண் விரயங்களைத் தடுப்பீர்கள். பண விஷயத்தை திட்டமிட்டுச் செய்து கொள்வது நன்மை பயக்கும். சேமிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. குடும்பத்தினருடன் சேர்ந்து நேரம் செலவிடுவீர்கள்.

ஆரோக்கியம்

கால் முட்டி, நரம்புகள், நரம்பு பிசங்குவது, கால் பிசங்குவது போன்ற பாதிப்புகள் வரும் சூழல் உள்ளது. வேலை மற்றும் குடும்பம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. 10 ஆம் இடத்தில் புதன், சூரியன், சுக்கிரன், செவ்வாய் அமருவதால் கால் முட்டிகளில் சிராய்ப்பு, கட்டி போன்றவை ஏற்படும். இந்த காலகட்டத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும், பெரிய பாதிப்புகள் ஏற்படாது.

வழிபாடு

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவுக்குப் பிரச்சனைகள் இருக்காது. வரும் பிரச்சனைகள் எல்லாமே சமாளிக்கும் வகையில் இருக்கும். ருத்ராபிஷேகம் செய்வது உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். பெண்கள் அதி கவனமாக இருக்கக்கூடிய வாரமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+