Rasi Palan This Week: ஆட்டத்தை ஆரம்பிக்கும் மேஷம் ராசி.. 7 நாட்களில் வரப்போகும் குட்நியூஸ்
வார ராசி பலன்: ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)
மேஷம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு சந்தோஷமும், அனுகூலமும் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல் தீரும். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். யார் என்ன கூறினாலும் அதற்காக மன வருத்தப்படாமல் உங்கள் வேலையைப் பார்ப்பீர்கள்.
சுபகாரியம்
நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். பல புதிய இடங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்களை சுற்றி பாசிட்டிவான அமைப்பை ஏற்படுத்திக் கொள்வீர்கள். திட்டமிட்டு நிறைய காரியங்களை செய்து முடிப்பீர்கள். சுப காரியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அடுத்தடுத்து நிறைய சுப காரியங்கள் வீட்டில் நடக்கும் நல்ல காலகட்டம்.
தொழிலில் ஏற்றம்
தொழிலில் அதிகளவிலான ஏற்றம் ஏற்படும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும் அற்புதமான காலகட்டம். உத்தியோகத்தில் இருந்த கஷ்டங்கள் தீரும். யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய நல்ல காலகட்டம். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும். வேற்று மொழி மனிதர்களால் நிறைய ஆதாயம் கிடைக்கும்.
பணவரவு
வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் சுபிக்ஷம் ஏற்படும். பணத்தினால் இருந்து வந்த மன வருத்தங்கள் நீங்கும். வெளியில் வராமல் இருந்து வந்த பணங்கள் எல்லாம் வந்து சேரும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கடன்களை அடைப்பதற்கான திட்டங்கள் வெற்றி பெறக்கூடும். சீட்டு பணங்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.
மகிழ்ச்சி
உங்களுக்கு நீண்ட நாட்களாக வர வேண்டிய கமிஷன், விருதுகள் போன்றவை வந்து சேரும். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எந்தவொரு விஷயத்தை செய்தாலும் திட்டமிட்டு அதில் சாதிப்பீர்கள்.
வழிபாடு
மேஷம் ராசியினருக்கு குரு வழிபாடு நல்ல ஏற்றத்தையும், மாற்றத்தையும் கொடுக்கும். முதுகு தண்டுவடப் பயிற்சி, வயிறு சார்ந்த பயிற்சிகளை செய்து கொள்வது நல்லது. ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
June Rasi Palan 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் எப்படி? -
ஆனி மாத பலன்: ராஜயோகத்தைப் பெறும் மேஷம் ராசி.. இந்த மாதத்தை தவற விட்டுடாதீங்க -
மகரம், கும்பம், மீனம் ராசிக்கு ஜாக்பாட் அடிக்குமா?.. ஜூன் மாதம் வரும் அற்புத மாற்றம் -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
Rasi Palan This Week: மீன ராசியினரே கவனம்.. சனி தரும் முக்கிய பலன்கள்.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications