Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rasi Palan This Week: சிக்ஸர் அடிக்கப் போகும் மேஷ ராசி.. தொட்டதெல்லாம் ஹிட்டடிக்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

Mesham Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Mesham weekly rasi palan lucky zodiac signs

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)

மேஷம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு நல்ல அனுகூலங்கள் கிடைக்கும். தேவையில்லாமல் மன அழுத்தத்திற்கு ஆளாவது, கோபப்படுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். தொழில், உத்தியோகத்தில் நல்ல ஏற்றம் உண்டாகும். நிறைய அலைச்சல்கள் இருக்கும். பெரிய மனிதர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.

வீடு கட்டும் யோகம்

லாபத்தில் சுக்கிரனும், புதனும், ராகுவும் அமர்ந்துள்ளதால் லாபம் பத்து மடங்கு உயரும். கல், கட்டுமானம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு, கலைத் துறையில் இருப்பவர்களுக்கு பெரிய புகழ், பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும் யோகம் உண்டாகும். மூத்தவர்கள் இருந்தால் அவர்களுக்குத் திருமணமாகும் யோகம் உண்டாகும். அவர்கள் வீடு கட்டுவது, நிலம் வாங்குவது போன்ற யோகம் உண்டு.

லாபம் கொட்டும்

வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயிக்கும் யோகம் உண்டாகும். தொட்டது துலங்கும். கால் முட்டி தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. பெரியதாக எந்த பாதிப்பும் ஏற்படும். லாபம் அதிகளவில் கொட்டும். அற்புதமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். லட்சுமி நாராயணப் பெருமாள் வழிபாடு ஏற்றத்தைத் தரும். வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை.

அனுகூலம்

விடுபட்ட கல்வியை மீண்டும் தொடங்கும் வாய்ப்பு ஏற்படும். விடுபட்ட தொழில் மீண்டும் கிடைக்கும் சூழல் ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்களுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும். உத்தியோகத்தில் அனுகூலங்கள் காணப்படும். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள், சிக்கல்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.

பிரச்சனைகள் நீங்கும்

நீண்ட நாட்களாக இருந்த சிக்கல்கள் எல்லாம் தீரும் நல்ல காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சுபகாரியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த விஷயங்கள் அனைத்தும் இனி அடுத்தடுத்து நடக்கக் கூடிய யோகம் ஏற்படும்.
மேஷம் ராசியினருக்கு துர்க்கை வழிபாடு அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும்.

செல்வாக்கு கூடும்

உத்தியோகத்தில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கூடும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். முதலீடுகளுக்கு எந்தவித குறையும் இருக்காது. வியாபாரத்தில் பெரிய அளவு வெற்றிகள் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+