Mesham Rasi Palan: பிப்ரவரி மாத 2ம் பாதி மேஷ ராசியினருக்கு எப்படி இருக்கும்.. முழு பலன்கள் விவரம்
பிப்ரவரி மாத பலன்: பிப்ரவரி 18 முதல் 28 ஆம் தேதி வரையிலான இரண்டாம் பாதியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Mesham rasi palan].
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். 2026 புத்தாண்டில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் 18 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மேஷம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)
மேஷம் ராசியினருக்கு அற்புதமான காலகட்டாக இருக்கும். நல்ல லாபங்கள் உண்டாகும். பெயர், புகழ் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். மனதில் இருக்கும் கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். மேஷம் ராசியினர் இருக்கும் வீட்டில் சுப காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும் யோகம் உண்டு. கடனால் மன வருத்தம் கொண்டிருந்தவர்கள், தூக்கமின்மையால் தவித்தவர்களுக்கு அந்த தொந்தரவுகள் நீங்கும்.
சங்கடங்கள் நீங்கும்
வேலை, படிப்பு என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனி நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். இளம் வயது நண்பர்கள் உங்கள் மீது மிகுந்த அன்பு கொள்வார்கள். பிள்ளைகள் மூலமாக காணப்பட்டிருந்த மன வருத்தங்கள், துணை மூலம் இருந்து வந்த சங்கடங்கள் எல்லாம் நீங்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு தேவையில்லாமல் உங்களுக்கு எல்லா உதவிகளும் செய்து அவமானப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது போன்ற சூழ்நிலைகள் இருந்திருக்கும்.
வழிபாடு
அவர்களே தங்களுடைய தவறுகளை சரிசெய்து உங்களிடம் வரும் அமைப்பு உள்ளது. வயிறு தொடர்பான பாதிப்புகள் எப்போதும் ஏற்படும். இந்த காலகட்டத்தில் வயிறு உபாதைகள் அதிகமாக காணப்படும். உணவு விஷயத்தில் குறிப்பக நல்ல ஜீரணமாகக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. விஷ்ணு காயத்ரியை கேட்பது, விஷ்ணுவை வழிபாடு செய்வது நல்ல ஏற்றத்தை ஏற்படுத்தும். எல்லா சுபகாரியங்களையும் இந்த காலகட்டத்தில் செய்யலாம்.












Click it and Unblock the Notifications