Mesham: தடைகளை தவிடு பொடியாக்கும் மேஷ ராசி.. முக்கியமான பிரச்சனை தீரப்போகுது

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஜூலை 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

mesham-rasi-palan-what-kind-of-benefits-will-get-mesham-rasi-people-from-july-6-to-12

ஆனி மாதத்தில் சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூலை 6 முதல் ஜூலை 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன்

மேஷ ராசியினருக்கு இதுவரை இருந்து வந்த நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மனக் குறைகள் தீரும். தொழிலில் திட்டமிட்டு இறங்கி காரியங்களை சாதிப்பீர்கள். மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் மனதிற்குப் பிடித்த விஷயங்களை செய்து தொழிலில் அற்புதமான ஏற்றம் பெறுவீர்கள். கடும் சொற்களைப் பேசுவது, கோபப்படுவதை தவிர்ப்பது நன்மை பயக்கும்.

சிக்கல்

எல்லா விஷயத்தையும் சமாளிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். வேலை ஆட்கள் விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய இலகிய சுபாவமே உங்களுக்குப் பலவிதத்தில் சிக்கலைக் கொடுக்கும். அதனால், மற்றவர்கள் ஏதாவது உதவி கேட்டால் கூட முடியும் என்றால் முடியும், இல்லையெனில் முடியாது என்று வெளிப்படையாக கூறிவிடுவது நல்லது.

தடைகள் நீங்கும்

தொழில் ரீதியாக, உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். தடைகள் எல்லாம் தவிடு பொடியாகும். காது, மூக்கு, தொண்டை விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஏசியில் படுத்துத் தூங்குபவர்கள், அதுதொடர்பான வேலைகளை செய்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குளிரில் இருப்பவர்கள், குளிர்ந்த பொருள்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

அனுகூலம்

வாகனங்களில் மாற்றம் செய்வீர்கள். தொழிலில் மாற்றம் செய்வீர்கள். அற்புதமான கூட்டாளிகள் கிடைப்பார்கள். மனதிற்குப் பிடித்து தெய்வ ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். நல்ல நண்பர்களை சந்திப்பீர்கள். மகான்களை தரிசனம் செய்வீர்கள். நீண்ட நாட்களாக உங்களுக்கு கிடைக்காமல் இருந்து வந்த மதிப்பு, மரியாதை, கெளரவம் கிடைக்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+