Rasi Palan This Week: மேஷ ராசிக்கு பணப் பிரச்சனை தீரப்போகுது.. ஒரு விஷயத்தில் கவனம்
Mesham Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். அந்த வகையில், மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)
மேஷம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அலைச்சல்கள் அதிகமாக இருப்பினும் பண வரவு அற்புதமாக இருக்கும். பழைய கடன்களை அடைக்கும் யோகம் உண்டாகும். நிம்மதியான தூக்கம் உண்டாகும். மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் நீங்கள், இனி எது வந்தாலும் பொறுமையாக சமாளிக்கலாம் என்கிற நிலை ஏற்படும். புதிய புதிய நண்பர்கள் கிடைப்பதன் மூலமாக உத்தவேகமும், மகிழ்ச்சியும் ஏற்படும்.
ஜெயம்
நினைத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல விஷயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும். நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டு உழைத்ததற்கான அங்கீகாரம் கிடைக்கும். பெரிய பதவிகள் கிடைக்கும். எப்போதும் உங்களைப் பற்றி குறை கூறிக் கொண்டிருந்தவர்கள் அவர்களாகவே விலகுவது, அவர்களாகவே வேறு ஏதேனும் விஷயத்தில் சிக்கிக் கொண்டு உங்களுக்கு நிம்மதியையைும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தக்கூடிய நல்ல காலகட்டம்.
கெளரவம்
நரசிம்மர் கவசத்தை கேட்பது ஏற்றத்தையும், சந்தோஷத்தைத் தரும். ஏழரை சனி இருப்பதால் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்வது நல்லது. ஏழரை சனி உங்களை மந்தமாக்கும். ஆனால், சனி கிரகமே நீசமாகக் கூடிய வலிமைப் பொருந்தியது உங்கள் ராசி. சனியின் வீடான மகரத்தில் செவ்வாய் ஆட்சி பெறக்கூடிய அமைப்புள்ளதால் இந்த காலகட்டத்தில் அடுத்த ஏழரை ஆண்டு காலத்தில் பெரிய கெளரவத்தை ஏற்படுத்தித் தரும். ஆரோக்கியத்தில் சளி தொந்தரவுகளில் கவனம் இருப்பது நன்மையைத் தரும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications