Mesham Rasi Palan: மேஷம் ராசிக்கு சொந்த வீடு வாங்கும் யோகம்.. இந்த வார பலன்கள்.. முழு விவரம்
Mesham Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)
மேஷம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு குடும்பத்தில் தேவையான விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். நல்ல அனுகூலங்கள் ஏற்படும். நிறைய பயணங்கள் உண்டாகும். அந்த பயணங்கள் மூலமாக ஆதாயமும், சந்தோஷமும் ஏற்படும். தொழில் ரீதியாக இருந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இழுபறியாக இருந்து வந்த விஷயங்கள் எல்லாம் அடுத்தடுத்து நடக்கும் யோகம் உண்டாகும்.
பொறுப்புகள்
நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய குரு வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். முதுகுத் தண்டுவடம் தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனம் தேவை. நீண்ட நாட்களுக்குப் பிறகு சமூகத்தில் இருக்கக்கூடிய பெரிய மனிதர்களை சந்திக்கக்கூடிய பாக்கியம் உண்டாகும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள் பெரிய பொறுப்புகளுக்கு வரக்கூடிய நல்ல காலகட்டம். பெரிய மனிதர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
தொழில்
தொழில் ரீதியாக அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தனிப்பட்ட முறையில் உங்கள் செல்வாக்கு கூடும். சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும் யோகம் உண்டாகும். பெரியவர்கள், தொழில் விஷயத்தில் நன்மைகள் உண்டாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும்.
வீடு வாங்கும் யோகம்
வீடு, நிலம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். காம்பவுண்ட் கட்டுவது, இன்டீரியர் வேலைகளைச் செய்யக்கூடிய யோகம் உண்டு. தடைபட்டு வந்த காரியங்களை எல்லாம் அடுத்தடுத்து நடத்தி முடிக்கும் யோகம் உண்டாகும். உங்களுடைய செல்வாக்குகள் கூடக்கூடிய நல்ல காலகட்டம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
முன்னேற்றம்
எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டம். தொவில், உத்தியோகம், படிப்பு, தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வுகள், பொறுப்புகள் வந்து சேரும். சொத்துகள் சேர்க்கை ஏற்படும். பண விஷயங்களில் இருந்து வந்த பாதிப்புகள், தடைகள் நிவர்த்தியாகும். குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு ஏற்றத்தைத் தரும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications